ஹாலிவுட்​டில் யோகிபாபு!

நடிகர் நெப்​போலியனை, ‘டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் தி நைன் ரூஜ்’ படம் மூலம் ஹாலிவுட்​டில் அறிமுகப்​படுத்​தி​ய​வர், திருச்​சியை பூர்​வீக​மாகக் கொண்ட டெல் கே.கணேசன்.

Nov 27, 2024 - 16:24
 0  18
ஹாலிவுட்​டில் யோகிபாபு!

நடிகர் நெப்​போலியனை, ‘டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் தி நைன் ரூஜ்’ படம் மூலம் ஹாலிவுட்​டில் அறிமுகப்​படுத்​தி​ய​வர், திருச்​சியை பூர்​வீக​மாகக் கொண்ட டெல் கே.கணேசன். ஜி.வி.பிர​காஷ் குமாரை​யும் தனது படம் மூலம் ஹாலிவுட்டுக்கு அழைத்​துச் செல்​லும் இவர், இப்போது, யோகி பாபுவை அங்கு அறிமுகப்​படுத்து​கிறார்.

தனது கைபா பிலிம்ஸ் சார்​பில் டெல் கே.கணேசன் அடுத்து தயாரித்து இயக்​கும் படம், ‘டிராப் சிட்​டி’. இதில், பிராண்டன் டி. ஜாக்​சன், ஜே ஜென்​கின்ஸ், நெப்​போலியன், ஜி.வி. பிரகாஷ் குமார் உட்பட பலர் நடிக்​கின்​றனர். சவாலான இசைத் துறை​யில் ஓர் இளம் கலைஞனின் போராட்​டத்​தைச் சொல்​லும் படம் இது. அழுத்​தமான கதைச் சொல்லல் மற்றும் சிறந்த நடிகர்​களின் பங்களிப்​போடு உருவாகும் இந்தப் படத்​தில், யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist