காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ.23, 24-ல் வட மாவட்டங்கள், டெல்டாவில் கனமழை

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ள நிலையில், வரும் 23, 24-ம் தேதிகளில் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Nov 24, 2025 - 17:04
 0  20
காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ.23, 24-ல் வட மாவட்டங்கள், டெல்டாவில் கனமழை

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ள நிலையில், வரும் 23, 24-ம் தேதிகளில் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று (நவ.17) மழை பெய்துள்ளது. குறிப்பாக, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 17 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஊத்துவில் 14 செ.மீ மழை பதிவானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist