’தி பாரடைஸ்’ படத்தின் மோகன் பாபுவின் லுக் வெளியீடு
‘தி பாரடைஸ்’ படத்திலிருந்து மோகன் பாபுவின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி பாரடைஸ்’.

‘தி பாரடைஸ்’ படத்திலிருந்து மோகன் பாபுவின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி பாரடைஸ்’. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதன் போஸ்டர்கள், உருவாகும் விதம் வீடியோக்கள் உள்ளிட்டவை இணையத்தில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன.
இப்படத்தில் மோகன் பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், படக்குழு உறுதிப்படுத்தாமல் இருந்தது. தற்போது ’ஷிகஞ்சா மாலிக்’ என்ற கதாபாத்திரத்தில் மோகன் பாபு நடிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது படக்குழு. மேலும், படத்திலிருந்து அவருடைய லுக்கை போஸ்டராக வெளியிட்டுள்ளார்கள். இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
What's Your Reaction?







