நாகார்ஜுனாவின் 2-வது மகன் அகிலுக்கு திருமண நிச்சயதார்த்தம்!
நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் ஷோபிதா துலிபாலாவுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது.
நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் ஷோபிதா துலிபாலாவுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகன் நடிகர் அகில் அக்கினேனிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
அவர் காதலித்து வந்த மும்பையை சேர்ந்த ஜைனப் ரவ்ஜீ-யுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக நாகார்ஜுனா தெரிவித்துள்ளார். “அகிலின் நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதிலும் ஜைனபை எங்கள் குடும்பத்துக்கு வரவேற்பதிலும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?