’பைசன்’ தான் என் முதல் படம்: துருவ் விக்ரம்

‘பைசன்’ தான் தனது முதல் படமென்று துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார். ’பைசன்’ படத்தின் முதல் அறிமுக விழா சென்னையில் உள்ள மாலில் நடைபெற்றது.

Oct 6, 2025 - 16:17
 0  6
’பைசன்’ தான் என் முதல் படம்: துருவ் விக்ரம்

‘பைசன்’ தான் தனது முதல் படமென்று துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார். ’பைசன்’ படத்தின் முதல் அறிமுக விழா சென்னையில் உள்ள மாலில் நடைபெற்றது. அதில் துருவ் விக்ரம் கலந்துக் கொண்டு மக்கள் முன்பு பேசினார். அதில், “என் பெயர் துருவ். இதுவரை 2 படங்கள் நடித்துள்ளேன். அந்த 2 படங்களை பார்க்கவில்லை என்றாலும் பிரச்சினையில்லை. இந்தப் படத்தை கண்டிப்பாக நீங்கள் பார்க்கவேண்டும், ஏனென்றால் இது தான் என் முதல் படம். ’பைசன்’ படத்தை அப்படித்தான் நான் பார்க்கிறேன், நீங்களும் அப்படித்தான் பார்ப்பீர்கள் என நம்புகிறேன்.

இப்படத்துக்காக அனுபமா, ராஜிஷா மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே பயங்கரமாக உழைத்திருக்கிறோம். அனைத்தையும் தாண்டி இந்தப் படத்துக்காக எனது 100% உழைப்பை கொடுத்திருக்கிறேன் என நம்புகிறேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist