“வருந்துகிறேன்...” - ஆசிஃப் அலியிடம் விருது பெற மறுத்த இசையமைப்பாளர் விளக்கம்
“யாரையும் அவமதிக்கவோ, அவர்களிடம் பாகுபாடு காட்ட வேண்டும் என்றோ நான் எப்போதும் நினைத்து கிடையாது. தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன். ஆசிஃப் அலி எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர்” என இசையமைப்பாளர் ரமேஷ் நாராயண் தெரிவித்துள்ளார்.
கொச்சி: “யாரையும் அவமதிக்கவோ, அவர்களிடம் பாகுபாடு காட்ட வேண்டும் என்றோ நான் எப்போதும் நினைத்து கிடையாது. தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன். ஆசிஃப் அலி எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர்” என இசையமைப்பாளர் ரமேஷ் நாராயண் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில், “நான் ஆந்தாலஜியில் ஜெயராஜ் இயக்கிய படத்துக்கு இசையமைத்துள்ளேன். ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வின்போது என்னை மேடைக்கு அழைக்காதது வருத்தமளிக்கிறது. ஆசிஃப் தான் எனக்கு விருது கொடுக்க வருகிறார் என்பது எனக்குத் தெரியாது. எனக்கு வயதாகிவிட்டது. தவிர, நான் மேடையில் இல்லை. ஒருவேளையில் மேடையில் ஏற்றப்பட்டு விருது கொடுக்கப்பட்டிருந்தால், என்னை நோக்கி யாரோ விருது கொடுக்க வருகிறார்கள் என்பதை அறிந்திருப்பேன்.
What's Your Reaction?