ராணுவ ரகசியங்களை கசியவிட்ட வழக்கு: ஜூலியன் அசாஞ்சை விடுவித்தது அமெரிக்க நீதிமன்றம்
அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்ட வழக்கில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை விடுவித்தது அமெரிக்காவின் வடக்கு மரியானா தீவுகளில் உள்ள ஃபெடரல் நீதிமன்றம்.
சைப்பேன்: அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்ட வழக்கில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை விடுவித்தது அமெரிக்காவின் வடக்கு மரியானா தீவுகளில் உள்ள ஃபெடரல் நீதிமன்றம்.
52 வயதான அவர், கடந்த திங்கட்கிழமை அன்று சுமார் 1901 நாட்களுக்கு பிறகு பிரிட்டன் நாட்டு சிறையிலிருந்து விடுதலை ஆனார். தனது விடுதலைக்கு ஈடாக அமெரிக்க நாட்டு ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்தியதற்காக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள அசாஞ்ச் ஒப்புக்கொண்டார்.
What's Your Reaction?