ரஃபாவைக் கைப்பற்ற நினைத்தால் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி கிடையாது: பைடன் எச்சரிக்கை
தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரைக் கைப்பற்றும் முனைப்பில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துமேயானால் இனி அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்கப்படாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்: தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரைக் கைப்பற்றும் முனைப்பில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துமேயானால் இனி அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்கப்படாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலி மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் திடீர் தாக்குதலில் 1500க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். சில வெளிநாட்டினர் உள்பட பலர் கடத்திச் செல்லப்பட்டனர். அதன் பின்னர் இஸ்ரேல் காசா மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தது. வான்வழித் தாக்குதலாக ஆரம்பித்து தரைவழித் தாக்குதலிலும் இறங்கியது. காசாவில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள். காசாவில் கடுமையாக மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை ஐ.நா. உள்பட சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
What's Your Reaction?