“அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி இந்தியா, ஆனால்...” - வரி விதிப்பு பற்றி மார்கோ ரூபியோ
இந்தியா அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி என தெரிவித்துள்ள அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, விளாடிமிர் புதினுக்கு எதிராகவே இந்தியா மீது ட்ரம்ப் அதிக வரிகளை விதித்ததாகத் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்: அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி இந்தியா எனத் தெரிவித்துள்ள அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, விளாடிமிர் புதினுக்கு எதிராகவே இந்தியா மீது ட்ரம்ப் அதிக வரிகளை விதித்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் டிவி நிகழ்ச்சியில், உக்ரைன் மீதான தாக்குதலை தொடர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இன்னும் எவ்வளவு காலம் கொடுக்கப் போகிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த மார்கோ ரூபியோ, “அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். உதாரணத்துக்கு, இந்தியா எங்களுடைய மிக நெருக்கமான கூட்டாளி. இருந்தும், இந்தியாவுக்கு எதிராக ட்ரம்ப் அதிக வரிகளை விதித்தார். இது புதினுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியே.
What's Your Reaction?







