பாஜக வேட்பாளர் கண்ணில் ஏற்பட்ட காயத்தில் சர்ச்சை... நெட்டிசன் கிண்டலுக்கு பதிலடி கொடுத்த மகள்!
கேரள மாநில கொல்லம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இவர் தேர்தல் பிரசாரத்தின்போது வலது கண்ணில் பிளாஸ்டர் போட்டு ஒட்டியபடி வலம்வருகிறார். திருச்சூர் பூரம் விழாவில் போலீஸார் அராஜகம் செய்ததற்கு சி.பி.எம் அரசுதான் காரணம் என விமர்சித்து கடந்த 20-ம் தேதி தேர்தல் பிரசாரத்தின்போது பேசியதாகவும், அப்போது சி.பி.எம் நிர்வாகி கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாகவும், குண்டறா ரயிவே அருகே உள்ள கண் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பியதாகவும் கிருஷ்ணகுமார் போலீஸில் புகார் அளித்திருந்தார். கொல்லம் பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார், கைதான சனல் புத்தன்விளாகிருஷ்ணகுமாரை ஆதரித்து கடந்த சில நாள்களுக்கு முன் பிரசாரம் செய்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, "அண்ணன் கிருஷ்ணகுமாரை பாருங்கள். அவர் மக்களிடம் பிரசாரம் செய்யும் போது யாரோ ஒரு மர்ம நபரால் தாக்கப்பட்டு தன்னுடைய கண் சேதம் அடைந்து பிளாஸ்டர் போட்டு இருக்கிறார். இருட்டாகவே கண்ணை வைத்திருக்க வேண்டும் எந்த காரணத்தைக் கொண்டும் வெளிச்சத்துக்கு வர வேண்டாம் என்று மருத்துவர் சொல்லியிருந்தனர். அதனால் நீங்கள் பிரசாரத்துக்கு வர வேண்டாம் என்று சொன்னேன். அதற்கு அவர், என்னுடைய கண்ணே போனாலும் பரவாயில்லை நான் கொல்லம் மக்களுக்காக நிற்பேன், வேட்பாளராக பிரச்சாரத்தை தொடர போகிறேன் என்று என்னுடன் வந்திருக்கிறார். எந்த அளவுக்கு கொல்லம் மக்கள் மீது அவர் அன்பும், நம்பிக்கையும் வைத்திருக்கிறார் என்று பார்த்துக் கொள்ளுங்கள்" என பேசியிருந்தார்.இந்த நிலையில் கிருஷ்ணகுமாரின் கண்ணில் காயம் ஏற்படுத்தியதாக குண்டறா பஞ்சாயத்து பா.ஜ.க பொதுச்செயலாளர் சனல் புத்தன்விளா(50) என்பவரை போலீஸார் கைது செய்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது கையில் இருந்த பைக் சாவி தெரியாமல் கிருஷ்ணகுமாரின் கண்ணில் பட்டதாக சனல் புத்தன்விளா தனது வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீஸார் கூறியுள்ளனர். இதையடுத்து சனல் புத்தன்விளா ஜாமீனில் விடப்பட்டார். தனது சொந்த கட்சி நிர்வாகி தெரியாமல் கண்ணில் குத்தியதை மறைத்து சி.பி.எம் கட்சி மீது பொய்யாக குற்றச்சாட்டு கூறியதாக கிருஷ்ணகுமார் கடும் விமர்சனத்துக்குள்ளானார்.கொல்லம் பா.ஜ.க வேட்பாளர் நடிகர் கிருஷ்ணகுமார்அதே சமயம் சமூக வலைத்தளத்தில் தனது தந்தை கிருஷ்ணகுமாருக்கு எதிராக பதிவிட்டவருக்கு சூடாக பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் மகள் தியா கிருஷ்ணா. ``கிருஷ்ணகுமாரின் கண்ணில் காயம் ஏற்பட்டதாக வந்த செய்திக்கு கீழே வந்த கமெண்டுகளை பார்த்து நன்றாக சிரித்தேன்” என தியா கிருஷ்ணாவுக்கு ஒருவர் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதற்கு, "நல்லது, உனது தந்தைக்கு இதுபோன்று நடக்கும்போது என்னிடம் வந்து சொன்னால் நானும் கொஞ்சம் சிரிக்கிறேன்" என பதிலடி கொடுத்த தியா கிருஷ்ணா, அதை இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸாகவும் வைத்துள்ளார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
கேரள மாநில கொல்லம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இவர் தேர்தல் பிரசாரத்தின்போது வலது கண்ணில் பிளாஸ்டர் போட்டு ஒட்டியபடி வலம்வருகிறார். திருச்சூர் பூரம் விழாவில் போலீஸார் அராஜகம் செய்ததற்கு சி.பி.எம் அரசுதான் காரணம் என விமர்சித்து கடந்த 20-ம் தேதி தேர்தல் பிரசாரத்தின்போது பேசியதாகவும், அப்போது சி.பி.எம் நிர்வாகி கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாகவும், குண்டறா ரயிவே அருகே உள்ள கண் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பியதாகவும் கிருஷ்ணகுமார் போலீஸில் புகார் அளித்திருந்தார்.
கிருஷ்ணகுமாரை ஆதரித்து கடந்த சில நாள்களுக்கு முன் பிரசாரம் செய்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, "அண்ணன் கிருஷ்ணகுமாரை பாருங்கள். அவர் மக்களிடம் பிரசாரம் செய்யும் போது யாரோ ஒரு மர்ம நபரால் தாக்கப்பட்டு தன்னுடைய கண் சேதம் அடைந்து பிளாஸ்டர் போட்டு இருக்கிறார். இருட்டாகவே கண்ணை வைத்திருக்க வேண்டும் எந்த காரணத்தைக் கொண்டும் வெளிச்சத்துக்கு வர வேண்டாம் என்று மருத்துவர் சொல்லியிருந்தனர். அதனால் நீங்கள் பிரசாரத்துக்கு வர வேண்டாம் என்று சொன்னேன். அதற்கு அவர், என்னுடைய கண்ணே போனாலும் பரவாயில்லை நான் கொல்லம் மக்களுக்காக நிற்பேன், வேட்பாளராக பிரச்சாரத்தை தொடர போகிறேன் என்று என்னுடன் வந்திருக்கிறார். எந்த அளவுக்கு கொல்லம் மக்கள் மீது அவர் அன்பும், நம்பிக்கையும் வைத்திருக்கிறார் என்று பார்த்துக் கொள்ளுங்கள்" என பேசியிருந்தார்.
இந்த நிலையில் கிருஷ்ணகுமாரின் கண்ணில் காயம் ஏற்படுத்தியதாக குண்டறா பஞ்சாயத்து பா.ஜ.க பொதுச்செயலாளர் சனல் புத்தன்விளா(50) என்பவரை போலீஸார் கைது செய்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது கையில் இருந்த பைக் சாவி தெரியாமல் கிருஷ்ணகுமாரின் கண்ணில் பட்டதாக சனல் புத்தன்விளா தனது வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீஸார் கூறியுள்ளனர். இதையடுத்து சனல் புத்தன்விளா ஜாமீனில் விடப்பட்டார். தனது சொந்த கட்சி நிர்வாகி தெரியாமல் கண்ணில் குத்தியதை மறைத்து சி.பி.எம் கட்சி மீது பொய்யாக குற்றச்சாட்டு கூறியதாக கிருஷ்ணகுமார் கடும் விமர்சனத்துக்குள்ளானார்.
அதே சமயம் சமூக வலைத்தளத்தில் தனது தந்தை கிருஷ்ணகுமாருக்கு எதிராக பதிவிட்டவருக்கு சூடாக பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் மகள் தியா கிருஷ்ணா. ``கிருஷ்ணகுமாரின் கண்ணில் காயம் ஏற்பட்டதாக வந்த செய்திக்கு கீழே வந்த கமெண்டுகளை பார்த்து நன்றாக சிரித்தேன்” என தியா கிருஷ்ணாவுக்கு ஒருவர் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதற்கு, "நல்லது, உனது தந்தைக்கு இதுபோன்று நடக்கும்போது என்னிடம் வந்து சொன்னால் நானும் கொஞ்சம் சிரிக்கிறேன்" என பதிலடி கொடுத்த தியா கிருஷ்ணா, அதை இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸாகவும் வைத்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
What's Your Reaction?