திருப்பத்தூர்: கட்டி முடித்தும் திறக்கப்படாத கட்டணமில்லா கழிவறை; பொதுமக்கள் அவதி!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா அருகே உள்ள சந்தை மைதானத்தில் பொதுமக்களின் நலன் கருதிக் கடந்த ஆண்டு கட்டணமில்லா பொதுக் கழிவறை புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கழிவறை முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டும், மாதக்கணக்கில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாமல் காட்சிப் பொருளாகவே கிடக்கிறது. இவ்விடத்தையொட்டி வணிக வாகனங்கள், பேருந்து நிறுத்தம் மற்றும் வாரந்தோறும் நடைபெறும் வாரச் சந்தை என எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில் கழிவறை திறக்க தாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.இது குறித்து அப்பகுதியில் இருக்கும் பொதுமக்களிடம் விசாரித்தபோது, நம்மிடம் பேசிய பெண் ஒருவர், ``நான் வெளியூர் தான்... இவ்விடத்தில் வெள்ளிக்கிழமை அன்று அதிகளவு பொருட்கள் குவிந்து காணப்படுவதோடு மிகவும் மலிவான விலையில் எல்லா வகையான பொருட்களும் கிடைக்கும். என் கணவரிடம் சண்டைப் போட்டாவது வாரந்தோறும் இங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்வேன். அப்போது பல நேரங்களில் ஆத்திர அவசரத்துக்குக் கழிவறை இருந்தும் பயன்படுத்த முடியாமல் உள்ளதே என்று புலம்பி உள்ளேன். மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல்... எதற்குத்தான் கட்டினார்கள் என்ற கேள்வி என்னிடம் அதிகம் எழும். விரைந்து திறக்க நடவடிக்கை எடுத்தால் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்" என்றார்.``மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் இந்த இடத்தில், கழிவறை இருந்தும் அதைப் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் சிரமத்தைக் கருத்தில்கொண்டு இந்தக் கழிவறையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர் அப்பகுதி மக்கள்.இந்த விவகாரம் தொடர்பாக நாட்றம்பள்ளி ஊர்த் தலைவர் சதிஷ்குமாரிடம் விளக்கம் கேட்டபோது, ``கான்ட்ரக்டர் இன்னும் எங்களிடம் சாவி ஒப்படைக்கவில்லை. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புதிதாகக் கட்டப்பட்டுள்ள இலவச பொதுக் கழிவறையைத் திறக்க ஏற்பாடு செய்கிறோம்" என்றார்.

Mar 19, 2025 - 17:11
 0  8
திருப்பத்தூர்: கட்டி முடித்தும் திறக்கப்படாத கட்டணமில்லா கழிவறை; பொதுமக்கள் அவதி!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா அருகே உள்ள சந்தை மைதானத்தில் பொதுமக்களின் நலன் கருதிக் கடந்த ஆண்டு கட்டணமில்லா பொதுக் கழிவறை புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கழிவறை முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டும், மாதக்கணக்கில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாமல் காட்சிப் பொருளாகவே கிடக்கிறது. இவ்விடத்தையொட்டி வணிக வாகனங்கள், பேருந்து நிறுத்தம் மற்றும் வாரந்தோறும் நடைபெறும் வாரச் சந்தை என எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில் கழிவறை திறக்க தாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இது குறித்து அப்பகுதியில் இருக்கும் பொதுமக்களிடம் விசாரித்தபோது, நம்மிடம் பேசிய பெண் ஒருவர், ``நான் வெளியூர் தான்... இவ்விடத்தில் வெள்ளிக்கிழமை அன்று அதிகளவு பொருட்கள் குவிந்து காணப்படுவதோடு மிகவும் மலிவான விலையில் எல்லா வகையான பொருட்களும் கிடைக்கும். என் கணவரிடம் சண்டைப் போட்டாவது வாரந்தோறும் இங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்வேன். அப்போது பல நேரங்களில் ஆத்திர அவசரத்துக்குக் கழிவறை இருந்தும் பயன்படுத்த முடியாமல் உள்ளதே என்று புலம்பி உள்ளேன். மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல்... எதற்குத்தான் கட்டினார்கள் என்ற கேள்வி என்னிடம் அதிகம் எழும். விரைந்து திறக்க நடவடிக்கை எடுத்தால் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்" என்றார்.

``மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் இந்த இடத்தில், கழிவறை இருந்தும் அதைப் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் சிரமத்தைக் கருத்தில்கொண்டு இந்தக் கழிவறையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர் அப்பகுதி மக்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக நாட்றம்பள்ளி ஊர்த் தலைவர் சதிஷ்குமாரிடம் விளக்கம் கேட்டபோது, ``கான்ட்ரக்டர் இன்னும் எங்களிடம் சாவி ஒப்படைக்கவில்லை. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புதிதாகக் கட்டப்பட்டுள்ள இலவச பொதுக் கழிவறையைத் திறக்க ஏற்பாடு செய்கிறோம்" என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist