தேர்தல் முடிந்த வேகத்தில், முதல்வரைச் சந்திக்கும் அமைச்சர்கள், நிர்வாகிகள்... பின்னணி என்ன?
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஹாலிடே மோடில் இருக்கிறார்கள். அதோடு சேர்த்து தேர்தல் தொடர்பான ஆலோசனைகளும் ஒவ்வொரு கட்சி அலுவலகத்திலும் தலைவர்களின் கேம்ப் ஆபீசிலும் ரிவ்யூ மீட்டிங் எனும் பெயரில் நடந்துகொண்டிருக்கிறது. தி.மு.க தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் அமைச்சர்கள் தாங்கள் பொறுப்பு வகித்த தொகுதியின் வேட்பாளர்களோடு செனடாப் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்துக்கு வந்து சந்தித்துவிட்டுச் செல்கிறார்கள். அமைச்சர்கள் தொடர்ந்து படையெடுப்பதன் பின்னணி என்ன என்ற கேள்வியோடு சீனியர் அமைச்சர் ஒருவரை அணுகினோம். “தேர்தல் முடிந்து தலைமையைச் சந்திப்பது எப்போதும் நடப்பதுதான். அப்படித்தான் இப்போதும் சந்திப்பு நடக்கிறது. தேர்தலில் என்னென்ன வேலைகள் பார்த்தோம். எந்தெந்தப் பகுதிகளிலெல்லாம் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. சொந்தக் கட்சி, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது, தேர்தலுக்குப் பின்னான கள நிலவரம் என்ன? உள்ளிட்ட சில விவகாரங்கள் குறித்து அமைச்சர்களும் வேட்பாளர்களும் தலைமையிடம் சில தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். ஒரே நேரத்தில் அனைவரும் வர வேண்டாம் என்பதால் ஒவ்வொரு மண்டலமாக வந்து சந்தித்துவிட்டுச் செல்கிறார்கள். இன்று (24.04.2024) தேனி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஐ.பெரியசாமி, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி உள்ளிட்டோர் வந்து சந்தித்து, வாழ்த்து வாங்கிவிட்டுச் செல்கிறார்கள்” என்றவர்...“அமைச்சர்கள், வேட்பாளர்களின் நன்றியை ஏற்றுக்கொள்வதோடு சரி, பெரியதாக யார் சொல்வதற்கும் முதல்வர் ரியாக்ட் செய்யவில்லை. தேர்தல் இப்போதுதான் முடிந்திருக்கிறது என்பதால் அது தொடர்பான அறிக்கை இன்னும் தலைமையிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்கிறார்கள். தேர்தல் தொடர்பான தரவுகள் வந்த பிறகுதான் எங்கே பிரச்னை இருந்ததோ அந்தந்தப் பகுதியினரை அழைத்து விசாரணை நடத்துவார்கள். அதன்பின் அமைச்சரவை மாற்றத்துக்கான ஏற்பாடுகளும் தயாராகிவிடும்” என்றார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஹாலிடே மோடில் இருக்கிறார்கள். அதோடு சேர்த்து தேர்தல் தொடர்பான ஆலோசனைகளும் ஒவ்வொரு கட்சி அலுவலகத்திலும் தலைவர்களின் கேம்ப் ஆபீசிலும் ரிவ்யூ மீட்டிங் எனும் பெயரில் நடந்துகொண்டிருக்கிறது.
தி.மு.க தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் அமைச்சர்கள் தாங்கள் பொறுப்பு வகித்த தொகுதியின் வேட்பாளர்களோடு செனடாப் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்துக்கு வந்து சந்தித்துவிட்டுச் செல்கிறார்கள். அமைச்சர்கள் தொடர்ந்து படையெடுப்பதன் பின்னணி என்ன என்ற கேள்வியோடு சீனியர் அமைச்சர் ஒருவரை அணுகினோம்.
“தேர்தல் முடிந்து தலைமையைச் சந்திப்பது எப்போதும் நடப்பதுதான். அப்படித்தான் இப்போதும் சந்திப்பு நடக்கிறது. தேர்தலில் என்னென்ன வேலைகள் பார்த்தோம். எந்தெந்தப் பகுதிகளிலெல்லாம் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. சொந்தக் கட்சி, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது, தேர்தலுக்குப் பின்னான கள நிலவரம் என்ன? உள்ளிட்ட சில விவகாரங்கள் குறித்து அமைச்சர்களும் வேட்பாளர்களும் தலைமையிடம் சில தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
ஒரே நேரத்தில் அனைவரும் வர வேண்டாம் என்பதால் ஒவ்வொரு மண்டலமாக வந்து சந்தித்துவிட்டுச் செல்கிறார்கள். இன்று (24.04.2024) தேனி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஐ.பெரியசாமி, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி உள்ளிட்டோர் வந்து சந்தித்து, வாழ்த்து வாங்கிவிட்டுச் செல்கிறார்கள்” என்றவர்...
“அமைச்சர்கள், வேட்பாளர்களின் நன்றியை ஏற்றுக்கொள்வதோடு சரி, பெரியதாக யார் சொல்வதற்கும் முதல்வர் ரியாக்ட் செய்யவில்லை. தேர்தல் இப்போதுதான் முடிந்திருக்கிறது என்பதால் அது தொடர்பான அறிக்கை இன்னும் தலைமையிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்கிறார்கள். தேர்தல் தொடர்பான தரவுகள் வந்த பிறகுதான் எங்கே பிரச்னை இருந்ததோ அந்தந்தப் பகுதியினரை அழைத்து விசாரணை நடத்துவார்கள். அதன்பின் அமைச்சரவை மாற்றத்துக்கான ஏற்பாடுகளும் தயாராகிவிடும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
What's Your Reaction?