தமிழகத்தில் ஜூலை 14 வரை மழை தொடரும்
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூலை 9) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூலை 9) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10 முதல் 14-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சி மாவட்டம் வாலாஜாபாத், ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 7 செ.மீ., ஆவடி, சென்னை சோழிங்கநல்லூர், வால்பாறை, சின்னக்கல்லாரில் 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
What's Your Reaction?