சென்னை டிபிஐ வளாகம் முன்பு முற்றுகை போராட்டம்: 2-வது நாளாக 1000+ ஆசிரியர்கள் கைது
அரசாணை 243 ரத்து உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற 1,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்
சென்னை: அரசாணை 243 ரத்து உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற 1,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
பதவி உயர்வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்துசெய்வது, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகம் முன்பு 3 நாட்கள் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) அறிவித்திருந்தது.
What's Your Reaction?