விடுபட்ட வங்கி ஆவணங்களை வழங்க கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மூன்று புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன

Jul 9, 2024 - 11:36
 0  0
விடுபட்ட வங்கி ஆவணங்களை வழங்க கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மூன்று புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அதில், நீதிமன்ற உத்தரவுப்படி வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால் விடுபட்ட ஆவணங்களை வழங்கவும், கரூர் சிட்டி யூனியன் வங்கியில் உள்ள கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist