37 ஆயிரம் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்க ரூ.30.65 கோடி ஒதுக்கீடு

நடப்பாண்டில் 37 ஆயிரம் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்க ரூ.30.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

May 22, 2025 - 11:53
 0  38
37 ஆயிரம் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்க ரூ.30.65 கோடி ஒதுக்கீடு

சென்னை: நடப்பாண்டில் 37 ஆயிரம் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்க ரூ.30.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை தவிர 37 மாவட்டங்களிலும் ஊரக வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைகள் வழங்க மாநில அளவிலான ஆலோசனைக் குழுக் கூட்டம் ஒவ்வொரு 6 மாதகால இடைவெளியில் நடத்தப்படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist