டிஎன்பிஎஸ்சி மூலம் 780 பேர் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகள் வழங்கினார்
நிதித்துறை கட்டுப்பாட்டில் உள்ள தணிக்கைத் துறைகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 780 பேருக்கு முதல்வர் மு
சென்னை: நிதித்துறை கட்டுப்பாட்டில் உள்ள தணிக்கைத் துறைகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 780 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிதித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு தணிக்கைத்துறையில் 7 கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் பணியிடங்களும், 928 இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியிடங்களில் முதற்கட்டமாக 700 இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியிடங்களும், உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில் 43 உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களும் மற்றும் இந்து சமய அறநிலைய நிறுவனங்களின் தணிக்கைத் துறையில் 30 உதவி தணிக்கை ஆய்வாளர் பணியிடங்களும், என மொத்தம் 780 பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் அடையாளமாக 20 பேருக்கு தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
What's Your Reaction?