சென்னையில் கடந்த ஓராண்டில் மட்டும் 1.40 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன: உதயநிதி பெருமிதம்

சென்​னை​யில் கடந்த ஓராண்​டில் மட்​டும் 1.40 லட்​சம் பட்டாக்கள் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார்.

Oct 14, 2025 - 10:42
 0  9
சென்னையில் கடந்த ஓராண்டில் மட்டும் 1.40 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன: உதயநிதி பெருமிதம்

சென்னை: சென்​னை​யில் கடந்த ஓராண்​டில் மட்​டும் 1.40 லட்​சம் பட்​டாக்​கள் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். வரு​வாய் மற்​றும் பேரிடர் மேலாண்​மைத் துறை சார்​பில் பயனாளி​களுக்கு வீட்​டுமனைப் பட்டா வழங்​கும் நிகழ்ச்சி சென்னை காரம்​பாக்​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தலைமை வகித்து 1,600 பயனாளி​களுக்கு வீட்​டுமனைப் பட்​டாக்​களை வழங்​கி​னார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: உணவு, உடை, இருப்​பிடம் இவை 3-ம்​தான் ஒவ்​வொரு மனிதனுக்கு அடிப்​படைத் தேவை​கள். இதில் உடை, உணவு எல்​லோருக்​கும் கிடைத்​து​விடும். ஆனால், குடி​யிருக்​கும் இடம் பட்​டாவுடன் வேண்​டும் என்​பது​தான் இன்​றைக்கு இருக்​கும் மிகப்​பெரிய பிரச்​சினை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist