புதுச்சேரி உள்கட்டமைப்புக்கு ரூ.5,828 கோடி தேவை: மத்திய உள்துறை செயலரிடம் முதல்வர் ரங்கசாமி மனு
புதுச்சேரியில் ஏர்போர்ட் விரிவாக்கம், புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்ட, மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அமைக்க ரூ.5,828 கோடி தேவை என்று மத்திய உள்துறை செயலரிடம் முதல்வர் ரங்கசாமி மனு அளித்துள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரியில் ஏர்போர்ட் விரிவாக்கம், புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்ட, மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அமைக்க ரூ.5,828 கோடி தேவை என்று மத்திய உள்துறை செயலரிடம் முதல்வர் ரங்கசாமி மனு அளித்துள்ளார்.
மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், கூடுதல் செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி ஆகியோர் அரசு முறை பயணமாக புதுவைக்கு வந்துள்ளனர். நோணாங்குப்பத்தில் உள்ள கடற்கரை விடுதியில் அவர்கள் தங்கியுள்ளனர். இன்று காலை தலைமை செயலகத்தில் புதுவையில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்கள் குறித்து அவர்கள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சரத்சவுகான், அரசுச் செயலர்கள் ராஜூ, மோரே, கேசவன், ஜெயந்த்குமார்ரே, ஜவகர், பல்வாடே, சத்தியமூர்த்தி, நெடுஞ்செழியன், ஆட்சியர் குலோத்துங்கன், டிஜிபி-யான ஷாலினிசிங், ஐஜி-யான அஜய்குமார்சிங்ளா மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
What's Your Reaction?