ஆடிப்பெருக்கை முன்னிட்டு பத்திரப் பதிவு அலுவலகங்கள் நாளை இயங்கும் என அறிவிப்பு
ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பத்திரப் பதிவு அலுவலகங்கள் நாளை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பத்திரப் பதிவு அலுவலகங்கள் நாளை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மங்களகரமான நாட்களில் அசையா சொத்துகள் குறித்த ஆவணப் பதிவுகளை மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புகின்றனர். இதை கருத்தில் கொண்டு, பொது விடுமுறை நாளான ஆகஸ்ட் 3-ம் தேதி சனிக்கிழமை (நாளை) ஆடிப்பெருக்கை முன்னிட்டு, ஆவணப் பதிவு மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.
What's Your Reaction?