சூர்யாவின் சனிக்கிழமை Review: ‘மாஸ்’ நானி, மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா காம்போவில் படம் எப்படி?
அடிதடி, சண்டை என கோபக்கார சிறுவனான சூர்யாவை (நானி) நினைத்து பெற்றோர்கள் கவலை கொள்கின்றனர். அதனால் ‘எப்போதும் கோபத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தால் அதுக்கு மதிப்பு இருக்காது. ஆக வாரத்தில் ஒருநாள் மட்டும் கோபத்தை வெளிப்படுத்து’ என சூர்யாவிடம் அவரது தாய் சத்தியம் வாங்கி கொள்கிறார்.
அடிதடி, சண்டை என கோபக்கார சிறுவனான சூர்யாவை (நானி) நினைத்து பெற்றோர்கள் கவலை கொள்கின்றனர். ‘எப்போதும் கோபத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தால் அதுக்கு மதிப்பு இருக்காது. ஆக, வாரத்தில் ஒருநாள் மட்டும் கோபத்தை வெளிப்படுத்து’ என சூர்யாவிடம் அவரது தாய் சத்தியம் வாங்கி கொள்கிறார். அம்மாவுக்கு கொடுத்த சத்தியத்தை பின்பற்றும் சூர்யா, 6 நாட்களில் தனக்கு ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு சனிக்கிழமையில் தணிக்கிறார்.
இதனிடையே, சோகுல பாலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் தயா (எஸ்.ஜே.சூர்யா), தனது தனிப்பட்ட கோபத்தை அப்பகுதி மக்கள் மீது கட்டவிழ்த்து விடும் அளவுக்கு கொடூரமான காவல் துறை அதிகாரி. தனது காதலி சாருலதா (பிரியங்கா மோகன்) மூலமாக இந்தப் பிரச்சினையை அறிந்துகொள்ளும் சூர்யா, சோகுல பாலம் பகுதிவாசிகளை தயாவிடம் இருந்து எப்படி மீட்கிறார் என்பது மீதிக்கதை. தெலுங்கில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ் டப்பிங் நேர்த்தியாக உள்ளது.
What's Your Reaction?