`உயிரை பறிப்பதற்கு முன் நடவடிக்கை தேவை..!’ - சென்னை அண்ணா சாலை அவலம்!

சென்னை அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு மெட்ரோ பகுதியில் மழைநீர் வடிக்கால் ஒன்று செல்கிறது. இதில் மெட்ரோ ஸ்டேஷன் பகுதியில்  அமைந்துள்ள தனியார் வங்கிக்கு அருகில் வாய்க்கால் பணிகள், நீண்ட காலமாகவே முழுமையாக முடிக்கப்படாமல், பாதசாரிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதி என்பதால் பொதுமக்கள் அந்த வாய்கால் பகுதியினை தான் நடைபாதையாக பயன்படுத்தி வருகிறார்கள். வாசன் அவென்யூ சந்திப்பு வரை வரும் கால்வாய், அத்தோடு முடிகிறது. முடியும் இடத்தில் நீண்டுகொண்டு நிற்கும் கம்பிகள் நடந்து செல்வோருக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த பகுதியில் நிறைய அலுவலகங்கள் இருப்பதாலும், பேருந்து நிறுத்தம், மெட்ரோ ஸ்டேஷன் மற்றும் இதர வசதிகளுக்காக பிரதான சாலையை இணைக்கும் பாதை என்பதாலும், ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் அந்த நடைபாதையில் நடந்து செல்கின்றனர்.அந்த வாய்கால் முழுமையாக முடிக்கபடாமல் உள்ளதாலும், முழுமையாக மூடப்படாமல் உள்ளதாலும், பாதுகாப்பின்றி, எச்சரிக்கை பலகை எதுவும் இன்றி, பகலில் நடப்பவர்களுக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் சொல்லவே வேண்டாம். பள்ளம் கிடப்பதும், அதில் கம்பி நீண்டு நிற்பதும், கண்ணுக்கே தெரிவதில்லை. ``இந்த பள்ளத்தை சரி செய்ய சொல்லி நாங்க நிறைய முயற்சி பண்ணிட்டோம். ஆனா, எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படல. அதை மூடுறதுக்கு ஒரு பலகையைக் கூட போட்டுவச்சோம். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து போறனால பலகை தாங்காம சீக்கிரமாவே உடைஞ்சு போயிடுது.இதுல கம்பிகள் வேற ஆபத்தான முறையில இருக்குறதுனால யாரவது தெரியாம உள்ள விழுந்தாங்கனா கண்டிப்பா பலமான அடிபடும். சில சமயங்களில் கம்பிகளால் உயிர் போறதுக்கான வாய்ப்பு கூட இருக்கு. குழந்தைங்க முதல் வயதானவர்கள் வரை பலர் இந்த பாதையை கடந்துதான் போறாங்க. வெயில் நேரங்களில் கூட பரவாயில்ல மழை நேரங்கள வழுக்கி விழுவதற்கான வாய்ப்புகளும் இருக்கு. அரசாங்கம் இதை  கவனத்தில் கொண்டு சீக்கிரமா அந்த பாதையை சரிப்பண்ணித் தரணும்ன்றது தான் எங்களோட நெடுநாள் கோரிக்கையாவே இருக்குது." என்பதே அங்கு நடந்து சென்ற பலரும் வைத்த கோரிக்கை. ஏதேனும் விபத்துக்களை ஏற்படுத்துவதற்கு முன், விரைவாக சரிசெய்வதன் மூலம் யாருக்கும் பாதிப்பு வராமல் தடுக்கலாம். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

May 28, 2024 - 12:43
 0  2
`உயிரை பறிப்பதற்கு முன் நடவடிக்கை தேவை..!’ - சென்னை அண்ணா சாலை அவலம்!

சென்னை அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு மெட்ரோ பகுதியில் மழைநீர் வடிக்கால் ஒன்று செல்கிறது. இதில் மெட்ரோ ஸ்டேஷன் பகுதியில்  அமைந்துள்ள தனியார் வங்கிக்கு அருகில் வாய்க்கால் பணிகள், நீண்ட காலமாகவே முழுமையாக முடிக்கப்படாமல், பாதசாரிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதி என்பதால் பொதுமக்கள் அந்த வாய்கால் பகுதியினை தான் நடைபாதையாக பயன்படுத்தி வருகிறார்கள்.

வாசன் அவென்யூ சந்திப்பு வரை வரும் கால்வாய், அத்தோடு முடிகிறது. முடியும் இடத்தில் நீண்டுகொண்டு நிற்கும் கம்பிகள் நடந்து செல்வோருக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த பகுதியில் நிறைய அலுவலகங்கள் இருப்பதாலும், பேருந்து நிறுத்தம், மெட்ரோ ஸ்டேஷன் மற்றும் இதர வசதிகளுக்காக பிரதான சாலையை இணைக்கும் பாதை என்பதாலும், ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் அந்த நடைபாதையில் நடந்து செல்கின்றனர்.

அந்த வாய்கால் முழுமையாக முடிக்கபடாமல் உள்ளதாலும், முழுமையாக மூடப்படாமல் உள்ளதாலும், பாதுகாப்பின்றி, எச்சரிக்கை பலகை எதுவும் இன்றி, பகலில் நடப்பவர்களுக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் சொல்லவே வேண்டாம். பள்ளம் கிடப்பதும், அதில் கம்பி நீண்டு நிற்பதும், கண்ணுக்கே தெரிவதில்லை.

``இந்த பள்ளத்தை சரி செய்ய சொல்லி நாங்க நிறைய முயற்சி பண்ணிட்டோம். ஆனா, எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படல. அதை மூடுறதுக்கு ஒரு பலகையைக் கூட போட்டுவச்சோம். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து போறனால பலகை தாங்காம சீக்கிரமாவே உடைஞ்சு போயிடுது.

இதுல கம்பிகள் வேற ஆபத்தான முறையில இருக்குறதுனால யாரவது தெரியாம உள்ள விழுந்தாங்கனா கண்டிப்பா பலமான அடிபடும். சில சமயங்களில் கம்பிகளால் உயிர் போறதுக்கான வாய்ப்பு கூட இருக்கு. குழந்தைங்க முதல் வயதானவர்கள் வரை பலர் இந்த பாதையை கடந்துதான் போறாங்க. வெயில் நேரங்களில் கூட பரவாயில்ல மழை நேரங்கள வழுக்கி விழுவதற்கான வாய்ப்புகளும் இருக்கு. அரசாங்கம் இதை  கவனத்தில் கொண்டு சீக்கிரமா அந்த பாதையை சரிப்பண்ணித் தரணும்ன்றது தான் எங்களோட நெடுநாள் கோரிக்கையாவே இருக்குது." என்பதே அங்கு நடந்து சென்ற பலரும் வைத்த கோரிக்கை. ஏதேனும் விபத்துக்களை ஏற்படுத்துவதற்கு முன், விரைவாக சரிசெய்வதன் மூலம் யாருக்கும் பாதிப்பு வராமல் தடுக்கலாம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist