Prajwal Revanna: `மன்னித்துக் கொள்ளுங்கள்; விசாரணைக்கு ஆஜராகிறேன்!' - வீடியோ வெளியிட்ட பிரஜ்வல்
கர்நாடகாவில் பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஹாசன் தொகுதி எம்.பி-யும், வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 3,000 பாலியல் வீடியோக்கள், கடந்த மாதம் நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த விவகாரம் பெரும் பூதாகரமாக வெடிக்கவே, வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நாளே அவர் ஜெர்மனிக்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. மாநில அரசும் உடனடியாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்க, அவர் வெளிநாட்டில்தான் இருக்கிறார் என்பது உறுதியானது.பிரஜ்வல் ரேவண்ணா (வலது ஓரம்)இந்த விவகாரத்தில், அவரின் தந்தையும், எம்.எல்.ஏ-வுமான ரேவண்ணாவின் பெயரும் அடிபட, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவருக்கெதிராகப் புகாரளித்த பெண் கடத்தப்பட்ட வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டு, முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தில் முதல் நபராக சிறையிலடைக்கப்பட்டார். இருப்பினும், அடுத்த சில நாள்களில் ஜாமீனில் வெளிவந்தார். ஒருகட்டத்தில், பிரஜ்வல் தந்தையின் சகோதரரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி, `இந்தியா வந்து குடும்ப கண்ணியத்தைக் காக்கவேண்டும்' என்று அவருக்கு வேண்டுகோள் விடுத்தார்.அடுத்த மூன்று நாள்களில் பிரஜ்வலின் தாத்தா தேவகவுடா, `பிரஜ்வல் எங்கிருந்தாலும் என்னுடைய பொறுமையைச் சோதிக்காமல் நாடு திரும்பி போலீஸில் சரணடைந்து, தாமாக சட்ட நடவடிக்கைக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும். இது என் கோரிக்கை அல்ல, எச்சரிக்கை' எனத் தெரிவித்தார். இன்னொருபக்கம், மத்திய அரசின் தூதரக பாஸ்போர்ட்டை பயன்படுத்திதான் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பியிருப்பதாகவும், உடனடியாக அந்த தூதரக பாஸ்போர்ட்டை முடக்கி இந்தியாவுக்கு அவரைக் கொண்டுவருமாறு பிரதமர் மோடிக்கு மே 1 மற்றும் 23 ஆகிய தேதிகளில் முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதினார்.பிரஜ்வல் ரேவண்ணா - ராஜாங்க பாஸ்போர்ட்மாநில அரசும் இதையே மத்திய வெளியுறவுத்துறைக்கு கோரிக்கையாக வைக்க, அதனை நேற்று ஆதரித்த குமாரசாமி, `பாஸ்போர்ட்டை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தால் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இதில் பின்பற்றப்படவேண்டிய சட்ட வழிமுறைகள் இருக்கின்றன. ஒரே நாளில் ரத்து செய்ய முடியாது' என்று தெரிவித்தார். இந்த நிலையில், வரும் 31-ம் தேதி காலை 10 மணியளவில் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஆஜராவதாக பிரஜ்வல் தற்போது அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் பேசும் வீடியோ சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.அந்த வீடியோவில், ``என்னைத் தவறாக நினைக்காதீர்கள். வரும் 31-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு விசாரணைக் குழு முன் இருப்பேன். விசாரணைக்கு ஒத்துழைப்பேன். சட்டத்தையும், நீதித்துறையையும் நான் நம்புகிறேன். இவையெல்லாம், என் மீதான பொய் வழக்குகள். வெளிநாட்டில் நான் இருக்கும் இடம் குறித்து முறையாகத் தகவல் தெரிவிக்காததற்கு என் குடும்பத்தினரிடமும், கட்சியினரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த சமயத்தில் என்மீது எந்த வழக்குகளும் இல்லை. சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்படவில்லை.Prajwal Revanna alleged that Congress leader Rahul Gandhi and other senior leaders spoke about his sex abuse videos which made him go into depression & Isolation. Says it was a political conspiracy. Will appear before SIT on May 31,#PrajwalRevanna. pic.twitter.com/trByiHyE00— Mohammed Zubair (@zoo_bear) May 27, 2024 ஆனால், நான் இந்தியாவிலிருந்து வெளியேறிய இரண்டு மூன்று நாள்களுக்குப் பிறகு என் மீதான இந்த குற்றச்சாட்டுகளை யூடியூபில் பார்த்தேன். பின்னர், என் வழக்கறிஞர் மூலம் ஏழு நாள்கள் அவகாசம் கேட்டு சிறப்பு விசாரணைக் குழுவுக்கு கடிதமும் எழுதினேன். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உட்பட பிற மூத்த தலைவர்கள் இந்த விவகாரத்தைப் பற்றி பகிரங்கமாகப் பேசினர். இதுவொரு அரசியல் சதி. இருப்பினும், மனசோர்வு காரணமாக என்னை தனிமைப்படுத்திக்கொண்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று பிரஜ்வல் தெரிவித்திருக்கிறார்.Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppbஇலவச லேப்டாப் திட்டத்தை முற்றிலும் முடக்கிவிட்டதா திமுக அரசு?!
கர்நாடகாவில் பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஹாசன் தொகுதி எம்.பி-யும், வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 3,000 பாலியல் வீடியோக்கள், கடந்த மாதம் நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த விவகாரம் பெரும் பூதாகரமாக வெடிக்கவே, வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நாளே அவர் ஜெர்மனிக்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. மாநில அரசும் உடனடியாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்க, அவர் வெளிநாட்டில்தான் இருக்கிறார் என்பது உறுதியானது.
இந்த விவகாரத்தில், அவரின் தந்தையும், எம்.எல்.ஏ-வுமான ரேவண்ணாவின் பெயரும் அடிபட, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவருக்கெதிராகப் புகாரளித்த பெண் கடத்தப்பட்ட வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டு, முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தில் முதல் நபராக சிறையிலடைக்கப்பட்டார். இருப்பினும், அடுத்த சில நாள்களில் ஜாமீனில் வெளிவந்தார். ஒருகட்டத்தில், பிரஜ்வல் தந்தையின் சகோதரரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி, `இந்தியா வந்து குடும்ப கண்ணியத்தைக் காக்கவேண்டும்' என்று அவருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அடுத்த மூன்று நாள்களில் பிரஜ்வலின் தாத்தா தேவகவுடா, `பிரஜ்வல் எங்கிருந்தாலும் என்னுடைய பொறுமையைச் சோதிக்காமல் நாடு திரும்பி போலீஸில் சரணடைந்து, தாமாக சட்ட நடவடிக்கைக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும். இது என் கோரிக்கை அல்ல, எச்சரிக்கை' எனத் தெரிவித்தார். இன்னொருபக்கம், மத்திய அரசின் தூதரக பாஸ்போர்ட்டை பயன்படுத்திதான் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பியிருப்பதாகவும், உடனடியாக அந்த தூதரக பாஸ்போர்ட்டை முடக்கி இந்தியாவுக்கு அவரைக் கொண்டுவருமாறு பிரதமர் மோடிக்கு மே 1 மற்றும் 23 ஆகிய தேதிகளில் முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதினார்.
மாநில அரசும் இதையே மத்திய வெளியுறவுத்துறைக்கு கோரிக்கையாக வைக்க, அதனை நேற்று ஆதரித்த குமாரசாமி, `பாஸ்போர்ட்டை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தால் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இதில் பின்பற்றப்படவேண்டிய சட்ட வழிமுறைகள் இருக்கின்றன. ஒரே நாளில் ரத்து செய்ய முடியாது' என்று தெரிவித்தார். இந்த நிலையில், வரும் 31-ம் தேதி காலை 10 மணியளவில் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஆஜராவதாக பிரஜ்வல் தற்போது அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் பேசும் வீடியோ சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், ``என்னைத் தவறாக நினைக்காதீர்கள். வரும் 31-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு விசாரணைக் குழு முன் இருப்பேன். விசாரணைக்கு ஒத்துழைப்பேன். சட்டத்தையும், நீதித்துறையையும் நான் நம்புகிறேன். இவையெல்லாம், என் மீதான பொய் வழக்குகள். வெளிநாட்டில் நான் இருக்கும் இடம் குறித்து முறையாகத் தகவல் தெரிவிக்காததற்கு என் குடும்பத்தினரிடமும், கட்சியினரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த சமயத்தில் என்மீது எந்த வழக்குகளும் இல்லை. சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்படவில்லை.
ஆனால், நான் இந்தியாவிலிருந்து வெளியேறிய இரண்டு மூன்று நாள்களுக்குப் பிறகு என் மீதான இந்த குற்றச்சாட்டுகளை யூடியூபில் பார்த்தேன். பின்னர், என் வழக்கறிஞர் மூலம் ஏழு நாள்கள் அவகாசம் கேட்டு சிறப்பு விசாரணைக் குழுவுக்கு கடிதமும் எழுதினேன். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உட்பட பிற மூத்த தலைவர்கள் இந்த விவகாரத்தைப் பற்றி பகிரங்கமாகப் பேசினர். இதுவொரு அரசியல் சதி. இருப்பினும், மனசோர்வு காரணமாக என்னை தனிமைப்படுத்திக்கொண்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று பிரஜ்வல் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
What's Your Reaction?