"விஜய்யிடம் தன் வாக்குகளை பறிகொடுப்பார் சீமான்..!" - கார்த்தி சிதம்பரம் ஓப்பன் டாக்

"திராவிடம், தமிழ் தேசியம் ஒன்று என சொல்வதன் மூலம் கொள்கை குழப்பத்தில் இருக்கிறாரா விஜய்?""கட்சி அறிமுகம், மாநாடு, தீர்மானம் அறிவித்திருக்கிறார். இதனால் கட்சிக்குள் எனர்ஜி ஏற்பட்டிருக்கிறது. இதுவே உருவம், வடிவம், அமைப்பாக மாறி தேர்தலை தனியாக சந்திக்க முடியுமா என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களுடைய நடத்தை, அணுகுமுறை, அமைப்பு ரீதியிலான செயல்கள்தான் தீர்மானிக்கும். திராவிடம், தமிழ் தேசியத்தில் இருந்து சில விஷயங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார். சிலவற்றை தவிர்த்துவிட்டார். திராவிட பாரம்பரியத்தில் வந்த பெரியாரை மட்டும் ஏற்றுக்கொள்கிறார். அடுத்து வந்த அண்ணா, கலைஞரை நிராகரிக்கிறார். எனவே இதுகுறித்தெல்லாம் அவர்தான் விளக்க வேண்டும்!"விஜய்"அ.தி.மு.க-வின் இடத்தை விஜய் பிடிக்கப் போகிறார் என்கிறார்களே?""இரட்டை இலை இருக்கும் வரை அவர்களின் வாக்கு வாங்கி மாறாது. விஜய்க்கு அவருடைய ரசிகர்களின் வாக்குகள்தான் கிடைக்கும். அடுத்ததாக முதல் தலைமுறை வாக்காளர்கள், சமூகத்தின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள், தமிழ் தேசிய விரும்பிகளின் வாக்குகளை வைத்திருக்கும் சீமானின் வாக்குகள் விஜய்க்கு மாறும். விஜயகாந்த் கட்சியில் இருக்கும் கொஞ்ச வாக்குகளும் சென்றுவிடும். பா.ஜ.க ஒரு மாற்றாக இருக்கும் என அண்ணாமலை பின்னால், ஒரு கூட்டம் சென்றது. இனி அவர்களும் விஜய் பக்கம் சென்றுவிடுவார்கள்!"எடப்பாடி பழனிசாமி"விஜய்க்கு எதிராக சீமானை யாரோ இயக்குவதாக த.வெ.க-வினர் சந்தேகம் கிளப்புகிறார்களே?""தனக்கு கிடைக்கும் வாக்குகள் விஜய்க்கு சென்றுவிடும் என்கிற அச்சம் சீமானுக்கு வந்துவிட்டது. 6% வாக்குகள் அவர் வைத்திருக்கிறார். அதில் 50% த.வெ.க-வுக்கு சென்றுவிடும். அதேநேரத்தில், த.வெ.க-வில் பெயர் சொல்லும் அளவுக்கு நிர்வாகிகள் யாரும் அந்த கட்சியில் உருவாகவில்லை. த.வெ.க ஒன் மேன் பார்ட்டிதான்!"சீமான்"தொடர்ச்சியாக பா.ஜ.க-வுக்கு, காங்கிரஸும் ஒன்றுதான் என்கிறாரே சீமான்?""வீரப்பன், பிரபாகரன், தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் எப்படி தேசிய கட்சியை ஏற்றுக்கொள்வார்கள்? தமிழக மக்களும் சீமானுக்கு அதிகாரம், பிரதிநிதித்துவம் கொடுக்கத் தயாராக இல்லை. ஆக்கபூர்வமாக இல்லாமல் உணர்ச்சிபூர்வமாக பேசுகிறாரே தவிர, வேலைவாய்ப்பை, உயர்கல்வி, சுகாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யப்போகிறேன் என்றெல்லாம் பேசுவதில்லை. எனவே அவர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்துவிடப்போகிறார்?"செல்வப்பெருந்தகை" ‘ஆட்சி, அதிகாரப் பகிர்வு குறித்து பேசி என்னை தர்மசங்கடமான நிலைக்குத் தள்ள வேண்டாம்’ என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சொல்கிறாரே?""ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்கிற நிலைக்கு அனைத்துக் கட்சிகளும் வந்துவிட்டன. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்துக்குத்தான் பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், அவர் கூட்டணி கட்சிகளான ஜனசேனா, பா.ஜ.க-வுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்கிறார். தனி கட்சியை விட மூன்று, நான்கு கட்சிகள் இணைந்து அமைச்சரவையில் இருப்பதுதான் உண்மையான ஜனநாயகம். அப்போதுதான் ஆரோக்கியமான விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும். கூட்டணியில் ஒரு கட்சிக்கு தனி பெரும்பான்மை வந்தாலும் மற்றவர்களை அரசாங்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது கருத்து!"ராகுல் காந்தி" ‘விஜய்க்கு மட்டுமா கூட்டம் கூடியது.. ராகுல் காந்தி வந்தபோதும்தான் அதிக கூட்டம் கூடியது’ என்ற செல்வப்பெருந்தகையின் ஒப்பீடு சரிதானா?""விஜய்க்கு வந்தது அவரது ரசிகர்கள். அதைப்போல தமிழக காங்கிரசால் கூட்டம் நடத்த முடியாது என்கிற எதார்த்த உண்மையை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அதேநேரத்தில் ராகுல் காந்தி தேசிய தலைவர். காங்கிரசில் இருக்கும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். 5 முறை பாராளுமன்ற உறுப்பினர். இன்று எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். ஆனால், இன்று புதிதாக எந்தவிதமான பிரதிநிதித்துவமும் இல்லாமல், தனது திரைப்பட புகழை மட்டுமே வைத்துக்கொண்டு வருபவரோடு ராகுலை ஒப்பிடக்கூடாது. இரண்டு களமும் வேறு; இருவருடைய ஆட்டமும் வேறு!"முதல்வர் ஸ்டாலின் "தி.மு.க ஆட்சி அமைக்க சோனியா உதவியாக இருந்தார் என்கிறீர்கள். ஆனால், தி.மு.க-வினர் தங்களால்தான் இங்கே காங்கிரஸ் பிழைத்திருக்கிறது என்பதுபோலப் பேசுகிறார்கள். இரண்டில் எது உண்மை?""இரண்டு கட்சிகளுக்கும் பலன் இருப்பதால்தான் கூட்டணி வைத்துக்கொள்கிறோம். நாங்கள் இருப்பதால்தான் மதச்சார்பின்மையை இந்த அணி தெளிவாக பின்பற்றும் என மக்கள் நம்புகிறார்கள். சிறுபான்மையின மக்களுக்கும், ‘இந்த அணியினர் பா.ஜ.க, இந்துத்துவாவை எதிர்ப்பார்கள்’ என்கிற நம்பிக்கை வருகிறது. எனவே நாங்களும் மதிப்பைக் கூட்டுகிறோம். நாங்கள் மதிப்பைக் கூட்டவில்லை என்றால், எதற்காக எங்களுடன் கூட்டணி வைக்க வேண்டும்… விட்டுவிட வேண்டியதுதானே? அரசியல் புரிதல் கொண்டவர்கள் ‘கூட்டணி கட்சியால் எந்த பலனும் இல்லை’ என சொல்ல மாட்டார்கள்."சத்தியமூர்த்தி பவன்- காங்கிரஸ்"ஆனால், தி.மு.க சொல்வதைக் கேட்டுத்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செயல்படுகிறார் என்கிறார்களே?""தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறது. அதேநேரத்தில் கட்சியின் அடிப்படையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். நடவடிக்கைகள் ஆக்கபூர்வமாகவும், அதிரடியாகவும் இருக்க வேண்டும். விரல் விட்டு எண்ணும் அளவில்தான் மாநில நிர்வாகிகள் இருக்க வேண்டும். தொகுதிக்கு உட்பட்டவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் வரக்கூடிய தகுதியுடைய நபர்களை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும். மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்துப் பேச வேண்டும். இதையெல்லாம் பலமுறை தலைமைக்கு தெரிவித்துவிட்டேன். ஆனால், யாரும் பின்பற்ற தயாராக இல்லை!"காங்கிரஸ் பிரசாரம்"இப்படி எல்லாம் இருந்தால் கட்சி மேலும் பலவீனம் அடையும் தானே?""இந்த நிலையைத் தாண்டி வர வேண்டுமா, வேண்டாமா என்பதை கட்சிதான் முடிவு செய்ய வேண்டும். நல்ல கூட்டணியில் இருக்கிறோம் இதுவே போதும் என்கிற மனநிலையில் சிலர் இருக்கிறார்கள். அதனா

Nov 12, 2024 - 12:38
 0  10
"விஜய்யிடம் தன் வாக்குகளை பறிகொடுப்பார் சீமான்..!" - கார்த்தி சிதம்பரம் ஓப்பன் டாக்

"திராவிடம், தமிழ் தேசியம் ஒன்று என சொல்வதன் மூலம் கொள்கை குழப்பத்தில் இருக்கிறாரா விஜய்?"

"கட்சி அறிமுகம், மாநாடு, தீர்மானம் அறிவித்திருக்கிறார். இதனால் கட்சிக்குள் எனர்ஜி ஏற்பட்டிருக்கிறது. இதுவே உருவம், வடிவம், அமைப்பாக மாறி தேர்தலை தனியாக சந்திக்க முடியுமா என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களுடைய நடத்தை, அணுகுமுறை, அமைப்பு ரீதியிலான செயல்கள்தான் தீர்மானிக்கும். திராவிடம், தமிழ் தேசியத்தில் இருந்து சில விஷயங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார். சிலவற்றை தவிர்த்துவிட்டார். திராவிட பாரம்பரியத்தில் வந்த பெரியாரை மட்டும் ஏற்றுக்கொள்கிறார். அடுத்து வந்த அண்ணா, கலைஞரை நிராகரிக்கிறார். எனவே இதுகுறித்தெல்லாம் அவர்தான் விளக்க வேண்டும்!"

விஜய்

"அ.தி.மு.க-வின் இடத்தை விஜய் பிடிக்கப் போகிறார் என்கிறார்களே?"

"இரட்டை இலை இருக்கும் வரை அவர்களின் வாக்கு வாங்கி மாறாது. விஜய்க்கு அவருடைய ரசிகர்களின் வாக்குகள்தான் கிடைக்கும். அடுத்ததாக முதல் தலைமுறை வாக்காளர்கள், சமூகத்தின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள், தமிழ் தேசிய விரும்பிகளின் வாக்குகளை வைத்திருக்கும் சீமானின் வாக்குகள் விஜய்க்கு மாறும். விஜயகாந்த் கட்சியில் இருக்கும் கொஞ்ச வாக்குகளும் சென்றுவிடும். பா.ஜ.க ஒரு மாற்றாக இருக்கும் என அண்ணாமலை பின்னால், ஒரு கூட்டம் சென்றது. இனி அவர்களும் விஜய் பக்கம் சென்றுவிடுவார்கள்!"

எடப்பாடி பழனிசாமி

"விஜய்க்கு எதிராக சீமானை யாரோ இயக்குவதாக த.வெ.க-வினர் சந்தேகம் கிளப்புகிறார்களே?"

"தனக்கு கிடைக்கும் வாக்குகள் விஜய்க்கு சென்றுவிடும் என்கிற அச்சம் சீமானுக்கு வந்துவிட்டது. 6% வாக்குகள் அவர் வைத்திருக்கிறார். அதில் 50% த.வெ.க-வுக்கு சென்றுவிடும். அதேநேரத்தில், த.வெ.க-வில் பெயர் சொல்லும் அளவுக்கு நிர்வாகிகள் யாரும் அந்த கட்சியில் உருவாகவில்லை. த.வெ.க ஒன் மேன் பார்ட்டிதான்!"

சீமான்

"தொடர்ச்சியாக பா.ஜ.க-வுக்கு, காங்கிரஸும் ஒன்றுதான் என்கிறாரே சீமான்?"

"வீரப்பன், பிரபாகரன், தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் எப்படி தேசிய கட்சியை ஏற்றுக்கொள்வார்கள்? தமிழக மக்களும் சீமானுக்கு அதிகாரம், பிரதிநிதித்துவம் கொடுக்கத் தயாராக இல்லை. ஆக்கபூர்வமாக இல்லாமல் உணர்ச்சிபூர்வமாக பேசுகிறாரே தவிர, வேலைவாய்ப்பை, உயர்கல்வி, சுகாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யப்போகிறேன் என்றெல்லாம் பேசுவதில்லை. எனவே அவர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்துவிடப்போகிறார்?"

செல்வப்பெருந்தகை

" ‘ஆட்சி, அதிகாரப் பகிர்வு குறித்து பேசி என்னை தர்மசங்கடமான நிலைக்குத் தள்ள வேண்டாம்’ என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சொல்கிறாரே?"

"ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்கிற நிலைக்கு அனைத்துக் கட்சிகளும் வந்துவிட்டன. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்துக்குத்தான் பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், அவர் கூட்டணி கட்சிகளான ஜனசேனா, பா.ஜ.க-வுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்கிறார். தனி கட்சியை விட மூன்று, நான்கு கட்சிகள் இணைந்து அமைச்சரவையில் இருப்பதுதான் உண்மையான ஜனநாயகம். அப்போதுதான் ஆரோக்கியமான விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும். கூட்டணியில் ஒரு கட்சிக்கு தனி பெரும்பான்மை வந்தாலும் மற்றவர்களை அரசாங்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது கருத்து!"

ராகுல் காந்தி

" ‘விஜய்க்கு மட்டுமா கூட்டம் கூடியது.. ராகுல் காந்தி வந்தபோதும்தான் அதிக கூட்டம் கூடியது’ என்ற செல்வப்பெருந்தகையின் ஒப்பீடு சரிதானா?"

"விஜய்க்கு வந்தது அவரது ரசிகர்கள். அதைப்போல தமிழக காங்கிரசால் கூட்டம் நடத்த முடியாது என்கிற எதார்த்த உண்மையை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அதேநேரத்தில் ராகுல் காந்தி தேசிய தலைவர். காங்கிரசில் இருக்கும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். 5 முறை பாராளுமன்ற உறுப்பினர். இன்று எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். ஆனால், இன்று புதிதாக எந்தவிதமான பிரதிநிதித்துவமும் இல்லாமல், தனது திரைப்பட புகழை மட்டுமே வைத்துக்கொண்டு வருபவரோடு ராகுலை ஒப்பிடக்கூடாது. இரண்டு களமும் வேறு; இருவருடைய ஆட்டமும் வேறு!"

முதல்வர் ஸ்டாலின்

"தி.மு.க ஆட்சி அமைக்க சோனியா உதவியாக இருந்தார் என்கிறீர்கள். ஆனால், தி.மு.க-வினர் தங்களால்தான் இங்கே காங்கிரஸ் பிழைத்திருக்கிறது என்பதுபோலப் பேசுகிறார்கள். இரண்டில் எது உண்மை?"

"இரண்டு கட்சிகளுக்கும் பலன் இருப்பதால்தான் கூட்டணி வைத்துக்கொள்கிறோம். நாங்கள் இருப்பதால்தான் மதச்சார்பின்மையை இந்த அணி தெளிவாக பின்பற்றும் என மக்கள் நம்புகிறார்கள். சிறுபான்மையின மக்களுக்கும், ‘இந்த அணியினர் பா.ஜ.க, இந்துத்துவாவை எதிர்ப்பார்கள்’ என்கிற நம்பிக்கை வருகிறது. எனவே நாங்களும் மதிப்பைக் கூட்டுகிறோம். நாங்கள் மதிப்பைக் கூட்டவில்லை என்றால், எதற்காக எங்களுடன் கூட்டணி வைக்க வேண்டும்… விட்டுவிட வேண்டியதுதானே? அரசியல் புரிதல் கொண்டவர்கள் ‘கூட்டணி கட்சியால் எந்த பலனும் இல்லை’ என சொல்ல மாட்டார்கள்."

சத்தியமூர்த்தி பவன்- காங்கிரஸ்

"ஆனால், தி.மு.க சொல்வதைக் கேட்டுத்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செயல்படுகிறார் என்கிறார்களே?"

"தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறது. அதேநேரத்தில் கட்சியின் அடிப்படையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். நடவடிக்கைகள் ஆக்கபூர்வமாகவும், அதிரடியாகவும் இருக்க வேண்டும். விரல் விட்டு எண்ணும் அளவில்தான் மாநில நிர்வாகிகள் இருக்க வேண்டும். தொகுதிக்கு உட்பட்டவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் வரக்கூடிய தகுதியுடைய நபர்களை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும். மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்துப் பேச வேண்டும். இதையெல்லாம் பலமுறை தலைமைக்கு தெரிவித்துவிட்டேன். ஆனால், யாரும் பின்பற்ற தயாராக இல்லை!"

காங்கிரஸ் பிரசாரம்

"இப்படி எல்லாம் இருந்தால் கட்சி மேலும் பலவீனம் அடையும் தானே?"

"இந்த நிலையைத் தாண்டி வர வேண்டுமா, வேண்டாமா என்பதை கட்சிதான் முடிவு செய்ய வேண்டும். நல்ல கூட்டணியில் இருக்கிறோம் இதுவே போதும் என்கிற மனநிலையில் சிலர் இருக்கிறார்கள். அதனால் நானும் பயனடைந்துதான் வருகிறேன். ஆனால், இந்த சிஸ்டம் மாற வேண்டும்."

காமராஜர்

"காமராஜர் ஆட்சியை நோக்கித்தான் எங்கள் பயணம் என சொல்லிவருவதன் மூலம், தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் எண்ணம் இருக்கிறதா?"

"தனிப்பட்ட முறையிலெல்லாம் காமராஜர் ஆட்சியை அமைக்க முடியாது. தமிழகத்தில் தனியாக ஆட்சி அமைக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியும் இல்லை. கூட்டணியில் இருந்துதான் வெற்றிபெற வேண்டும். எங்களுக்கு என சில பலமும், பலவீனமும் இருக்கிறது. ஆனால், கூட்டணியில் இருக்கும்போது எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும். அதற்கு எங்களுடைய கட்சி இன்னும் வலுவடைய வேண்டும். நிர்வாகிகளை குறைக்க வேண்டும். மக்கள் பிரச்னைகளை பேச வேண்டும்."

கூவம் நதி - மேயர் பிரியா - கார்த்தி சிதம்பரம்

"கூவம் சீரமைப்பு பணிகள் தொடர்பாக வெள்ளையறிக்கை கேட்டிருந்தீர்களே?"

"ஒரு கடிதம் மட்டுமே வந்திருக்கிறது. அதிலும் முழுமையான பதில் இல்லை. மீண்டும் கடிதம் எழுதுவதற்கு தயாராகி வருகிறேன். மக்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்னைக்குத்தான் குரல் கொடுத்தேன். ஆனால், கட்சியிலிருந்து எனக்கு யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதுதான் கட்சியில் இருக்கும் பிரச்னை. பொது பிரச்னைகளைக்கூட பேசுவதற்குத் தயங்குகிறோம். மெரினா விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் இறந்து போனார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக கார் விபத்துகள் நடக்கின்றன. இதுபோல பல பிரச்னைகள் குறித்துப் பேசுவதற்கு காங்கிரஸ் தயங்குகிறது. இதுதான் கட்சியின் வளர்ச்சிக்கும் பெரும் இடையூறாக இருக்கிறது. நான் போகவேண்டும் என்கிற பாதை, ஸ்டைலை பின்பற்ற கட்சியில் இருப்பவர்கள் தயாராக இல்லை என்பதுதான் எதார்த்த உண்மை."

டொனால்டு ட்ரம்ப்

"மீண்டும் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டிருப்பதை பா.ஜ.க-வினர் கொண்டாடுகிறார்களே?"

"வேடிக்கையாக இருக்கிறது. ட்ரம்ப் சித்தாந்தமும், பா.ஜ.க-வினரின் சித்தாந்தமும் ஒன்றாக இருக்கிறது என அவர்கள் நினைக்கிறார்கள். இதைவிட பைத்தியக்காரத்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. ட்ரம்ப் வீட்டுக்கு சென்றால், ஒருவாய் சாப்பாடுகூட பா.ஜ.க-வினரால் சாப்பிட முடியாது. அவருடைய பழக்க வழக்கத்துக்கும், இவர்களுடைய பழக்க வழக்கத்துக்கும் 180 டிகிரி வித்தியாசம் இருக்கிறது. ஆக பா.ஜ.க-வினர் ஏதோவொரு குருட்டு நம்பிக்கையில் இருக்கிறார்கள்!"

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist