'அதிமுக, ஜெயலலிதா, இந்துத்துவா..!' - அண்ணாமலை அரசியலின் பின்னணி என்ன?!
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெற்றிடத்தை பா.ஜ.க நிரப்பி வருகிறது. இந்த தேர்தலில் இரட்டை இலக்க வாக்கு சதவிகிதத்தை பெற்று, தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பா.ஜ.க உருவெடுக்கும். அ.தி.மு.க இந்துத்துவா சித்தாந்தத்தில் இருந்து விலகிச் செல்வதால் பா.ஜ.கவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்புவரை ஒரு இந்து வாக்காளரின் இயல்பான தேர்வு அ.தி.மு.க.வாகத்தான் இருந்தது. ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை வெளிப்படையாக காட்டினார்.அண்ணாமலை, மோடிஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு, மதமாற்ற தடைச்சட்டத்தை அமல்படுத்துவதற்கும் நாட்டிலேயே முதல் அரசியல்வாதியாக நின்றார். ஆனால் 2016-ல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க இந்துத்துவா அடையாளத்தில் இருந்து விலகிவிட்டது. தமிழ்நாட்டில் கோயில்களை காக்கும் கட்சியினை மக்கள் தேடுகின்றார்கள் என்றால் அது இயல்பாகவே பா.ஜ.கவாக தான் இருக்கும். 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தது, ஜெயலலிதா மறைந்தது ஆகிய காரணங்களால்தான் தமிழகத்தில் பா.ஜ.க பெரிய இடத்தை பிடித்தது" என்றார்.ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை! தடைபோட்டாரா செல்வப்பெருந்தகை?அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அ.தி.மு.க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "மறைந்த முதல்வர் ஜெயலலிதா சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மற்ற மதங்களுக்குப் பொதுவாகத் திகழ்ந்தவர். அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாட்டில் பல மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது. தமிழகத்தில் எந்தவித வன்முறைக்கும் இடம் அளிக்காமல் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக திகழச் செய்தவர் ஜெயலலிதா.ஜெயலலிதாபா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு பரப்பும் நோக்கில், ஒற்றை மதவாதத்தைச் சார்ந்த தலைவர் போல பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்துக்குரியது. எம்ஜிஆர் வழியில், “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற திராவிடக் கோட்பாட்டின் அடிப்படையில் பொற்கால ஆட்சி தந்தவர் ஜெயலலிதா. தமது ஆட்சிக் காலத்தில் முதன்முதலாக திருக்கோயில்களில் அன்னதானத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கும் திட்டம், புதிதாக வக்ஃபு நிறுவன மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டு, 3 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது. வக்ஃபு வாரியத்துக்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. தமது ஆட்சிக் காலத்தில்தான் கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான, ஜெருசலம் சென்று வருவதற்கு, அரசு நிதி உதவி அளிக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அனைத்து மதங்களை சேர்ந்த மக்களை பாதுகாப்பதிலும், அவர்களின் நம்பிக்கைகளை மதித்துப் போற்றுவதிலும், எவ்வித சமரசத்துக்கும் இடமின்றி உறுதியாக இருந்திருக்கிறார்.அதிமுக ஜெயக்குமார்தமிழக அரசியல் உள்ளவரை அனைத்து மக்களுக்கும் பொதுவான தலைவராம் ஜெயலலிதாவின் நெடும்புகழ் அவ்வண்ணமே நிலைத்து நிற்கும். அண்ணாமலை, தனது சொந்த அரசியல் லாபத்துக்காகவும், தமிழகத்தில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவர் என்று, அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்துக்குரியது" என தெரிவித்துள்ளார்.இதேபோல் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது அறிக்கையில், "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை, இந்துத்துவா தலைவர் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குறிப்பிடுவது அவருடைய அறியாமை, தவறான புரிதலைதான் வெளிப்படுத்துகிறது. சாதி, மத, பேதங்களை கடந்து அனைத்து தரப்பினராலும் மதித்து போற்றக்கூடிய ஒரு மாபெரும் தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா. சசிகலா'மக்களால் நான் மக்களுக்காகவே நான்' என்று தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலனுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு சிறந்த மக்கள் தலைவர் அவர். அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் வழியில் ஒரு உண்மையான திராவிட தலைவராக தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டியவர். இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து சமூகத்தினரும் சொந்தம் கொண்டாடிய ஒரே ஒப்பற்ற தலைவி அவர்தான் என்பது நாடறிந்த உண்மை.ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை! தடைபோட்டாரா செல்வப்பெருந்தகை?சாதி மத பேதங்களை கடந்து ஏழை, எளிய சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட தன்னை அர்பணித்துக்கொண்ட மாபெரும் தலைவர் ஜெயலலிதா. ஏழை, எளியவர்களுக்கு அம்மாவாக, அரசியல் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஆளுமைதான் ஜெயலலிதா. அவருக்கு தெய்வ நம்பிக்கை இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதேசமயம் என்றைக்கும் மத நம்பிக்கை கிடையாது. அனைவரையும் சமமாக மதித்த ஒரே ஒப்பற்ற தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் இருந்தவர். அவரது ஆட்சி காலங்களில் அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதுகாப்போடு இந்த தமிழ் மண்ணில் வாழமுடிந்தது. தமிழகத்தை ஒரு அமைதி பூங்காவாக வைத்திருந்த பெருமை அவரையே சேரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு மக்கள் தலைவரை எந்தவித குறுகிய வட்டத்துக்குள்ளும் யாராலும் அடைத்துவிட முடியாது என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.குபேந்திரன்இதுகுறித்து பேசிய அரசியல் நோக்கர்கள், "ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க மூன்றாக பிளவுபட்டு இருக்கிறது. எனவே அந்தக்கட்சியின் வாக்குகளை தங்கள் பக்கம் இழுப்பதற்கு பா.ஜ.க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 'எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார். அதே வரிசையில்தான் தற்போது அண்
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெற்றிடத்தை பா.ஜ.க நிரப்பி வருகிறது. இந்த தேர்தலில் இரட்டை இலக்க வாக்கு சதவிகிதத்தை பெற்று, தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பா.ஜ.க உருவெடுக்கும். அ.தி.மு.க இந்துத்துவா சித்தாந்தத்தில் இருந்து விலகிச் செல்வதால் பா.ஜ.கவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்புவரை ஒரு இந்து வாக்காளரின் இயல்பான தேர்வு அ.தி.மு.க.வாகத்தான் இருந்தது. ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை வெளிப்படையாக காட்டினார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு, மதமாற்ற தடைச்சட்டத்தை அமல்படுத்துவதற்கும் நாட்டிலேயே முதல் அரசியல்வாதியாக நின்றார். ஆனால் 2016-ல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க இந்துத்துவா அடையாளத்தில் இருந்து விலகிவிட்டது. தமிழ்நாட்டில் கோயில்களை காக்கும் கட்சியினை மக்கள் தேடுகின்றார்கள் என்றால் அது இயல்பாகவே பா.ஜ.கவாக தான் இருக்கும். 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தது, ஜெயலலிதா மறைந்தது ஆகிய காரணங்களால்தான் தமிழகத்தில் பா.ஜ.க பெரிய இடத்தை பிடித்தது" என்றார்.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அ.தி.மு.க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "மறைந்த முதல்வர் ஜெயலலிதா சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மற்ற மதங்களுக்குப் பொதுவாகத் திகழ்ந்தவர். அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாட்டில் பல மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது. தமிழகத்தில் எந்தவித வன்முறைக்கும் இடம் அளிக்காமல் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக திகழச் செய்தவர் ஜெயலலிதா.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு பரப்பும் நோக்கில், ஒற்றை மதவாதத்தைச் சார்ந்த தலைவர் போல பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்துக்குரியது. எம்ஜிஆர் வழியில், “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற திராவிடக் கோட்பாட்டின் அடிப்படையில் பொற்கால ஆட்சி தந்தவர் ஜெயலலிதா. தமது ஆட்சிக் காலத்தில் முதன்முதலாக திருக்கோயில்களில் அன்னதானத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கும் திட்டம், புதிதாக வக்ஃபு நிறுவன மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டு, 3 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது. வக்ஃபு வாரியத்துக்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. தமது ஆட்சிக் காலத்தில்தான் கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான, ஜெருசலம் சென்று வருவதற்கு, அரசு நிதி உதவி அளிக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அனைத்து மதங்களை சேர்ந்த மக்களை பாதுகாப்பதிலும், அவர்களின் நம்பிக்கைகளை மதித்துப் போற்றுவதிலும், எவ்வித சமரசத்துக்கும் இடமின்றி உறுதியாக இருந்திருக்கிறார்.
தமிழக அரசியல் உள்ளவரை அனைத்து மக்களுக்கும் பொதுவான தலைவராம் ஜெயலலிதாவின் நெடும்புகழ் அவ்வண்ணமே நிலைத்து நிற்கும். அண்ணாமலை, தனது சொந்த அரசியல் லாபத்துக்காகவும், தமிழகத்தில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவர் என்று, அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்துக்குரியது" என தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது அறிக்கையில், "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை, இந்துத்துவா தலைவர் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குறிப்பிடுவது அவருடைய அறியாமை, தவறான புரிதலைதான் வெளிப்படுத்துகிறது. சாதி, மத, பேதங்களை கடந்து அனைத்து தரப்பினராலும் மதித்து போற்றக்கூடிய ஒரு மாபெரும் தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா.
'மக்களால் நான் மக்களுக்காகவே நான்' என்று தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலனுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு சிறந்த மக்கள் தலைவர் அவர். அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் வழியில் ஒரு உண்மையான திராவிட தலைவராக தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டியவர். இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து சமூகத்தினரும் சொந்தம் கொண்டாடிய ஒரே ஒப்பற்ற தலைவி அவர்தான் என்பது நாடறிந்த உண்மை.
சாதி மத பேதங்களை கடந்து ஏழை, எளிய சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட தன்னை அர்பணித்துக்கொண்ட மாபெரும் தலைவர் ஜெயலலிதா. ஏழை, எளியவர்களுக்கு அம்மாவாக, அரசியல் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஆளுமைதான் ஜெயலலிதா. அவருக்கு தெய்வ நம்பிக்கை இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதேசமயம் என்றைக்கும் மத நம்பிக்கை கிடையாது. அனைவரையும் சமமாக மதித்த ஒரே ஒப்பற்ற தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் இருந்தவர். அவரது ஆட்சி காலங்களில் அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதுகாப்போடு இந்த தமிழ் மண்ணில் வாழமுடிந்தது. தமிழகத்தை ஒரு அமைதி பூங்காவாக வைத்திருந்த பெருமை அவரையே சேரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு மக்கள் தலைவரை எந்தவித குறுகிய வட்டத்துக்குள்ளும் யாராலும் அடைத்துவிட முடியாது என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அரசியல் நோக்கர்கள், "ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க மூன்றாக பிளவுபட்டு இருக்கிறது. எனவே அந்தக்கட்சியின் வாக்குகளை தங்கள் பக்கம் இழுப்பதற்கு பா.ஜ.க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 'எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார். அதே வரிசையில்தான் தற்போது அண்ணாமலையும் பேசி இருக்கிறார். இதனால் அதிமுகவின் வாக்கு வங்கி பா.ஜ.க செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான்" என்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "ராமர் கோவில் கட்டுவதற்கு ஜெயலலிதா செங்கல் அனுப்பினார். அதைத்தான் அண்ணாமலை தற்போது பேசி வருகிறார். ஓட்டுவாங்குவதற்காக அண்ணாமலை இவ்வாறெல்லாம் பேசி வருகிறார். ஆனால் இது மக்கள் மத்தியில் எடுபடாது. ஜெயலலிதாவை சில மாதங்களுக்கு முன்பு ஊழல்வாதி என்று இதே அண்ணாமலைதான் பேசினார். அப்போதும், இப்போதும் அ.தி.மு.க போதுமான அளவுக்கு எதிர்வினையாற்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அ.தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டாம் என்றுதான் பா.ஜ.க சென்றது. பிறகு எதற்கு இப்படியெல்லாம் பேசுகிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை அ.தி.மு.கவிடம் சரண்டர் ஆகிவிடலாம் என நினைக்கிறாரா என தெரியவில்லை. அண்ணாமலை வரும் காலத்தில் அரசியலில் மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்திக்க போகிறார்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
What's Your Reaction?