உதகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு - ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 4 நாள் பயணமாக புதன்கிழமை உதகை வந்தடைந்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து குடியரசுத் தலைவரை வரவேற்றார்.
உதகை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 4 நாள் பயணமாக புதன்கிழமை உதகை வந்தடைந்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து குடியரசுத் தலைவரை வரவேற்றார்.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நான்கு நாள் பயணமாக விமான மூலம் கோவை வந்தார். நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றம் ஏற்பட்டு உதகையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் அவரது ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டது. கோவையில் இருந்து சாலை மார்க்கமாக காரில் உதகை வந்தடைந்தார். ராஜ் பவன் வந்த குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
What's Your Reaction?