கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: தயார் நிலையில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படை
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும்தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் கடலூருக்கு வந்துள்ளனர். முன்னச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் கடலூருக்கு வந்துள்ளனர். முன்னச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. இன்று (நவ.27) புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்துக்கு வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்துக்கு இன்று (27) ரெட் அலர்ட்டு விடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பரவலாகமழை பெய்து வருகிறது.
What's Your Reaction?