வங்கதேசத்தில் தொடரும் இந்துக்கள் மீதான தாக்குதல்: மத்திய அரசு தலையிட இந்து முன்னணி கோரிக்கை
வங்கதேசத்தில் தொடர்ந்து சிறுபான்மை இந்துக்களின் மீது தாக்குதல் நடந்து வருகிறது. மத்திய அரசு உடனே தலையிட்டு இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னை: வங்கதேசத்தில் தொடர்ந்து சிறுபான்மை இந்துக்களின் மீது தாக்குதல் நடந்து வருகிறது. மத்திய அரசு உடனே தலையிட்டு இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”வங்கதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு இட ஒதுக்கீடு சம்பந்தமான மாணவர்கள் போராட்டம் கலவரமாக உருவெடுத்தது. பிறகு அந்தப் போராட்டம் அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதலாக வடிவெடுத்து, மாபெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் கலவரமாக வெடித்தது. இந்துக்களின் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. இந்துக்கள் பொதுவெளியில் தாக்கப்பட்டனர். இந்து பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டனர் . அங்கே இந்துக்கள் வாழவே வழியின்றி ஒடுக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறின.
What's Your Reaction?