‘இந்து தமிழ்’ செய்தி எதிரொலி: சென்னை கண்ணப்பர் திடல் பயனாளிகள் 114 பேருக்கு வீடு ஒதுக்கீடு

'இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலியாக, சென்னை கண்ணப்பர் திடலில் 22 ஆண்டுகளாக சுகாதாரமற்ற நிலையில் வசித்து வந்த 114 பயனாளிகளுக்கு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சர் உதயநிதி இன்று வழங்கினார்

Sep 23, 2024 - 16:42
 0  4
‘இந்து தமிழ்’ செய்தி எதிரொலி: சென்னை கண்ணப்பர் திடல் பயனாளிகள் 114 பேருக்கு வீடு ஒதுக்கீடு

சென்னை: 'இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலியாக, சென்னை கண்ணப்பர் திடலில் 22 ஆண்டுகளாக சுகாதாரமற்ற நிலையில் வசித்து வந்த 114 பயனாளிகளுக்கு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சர் உதயநிதி இன்று (திங்கள்கிழமை) வழங்கினார்.

சென்னை ரிப்பன் மாளிகை அருகில் வசித்து வந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த 2002-ம் ஆண்டு நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிக்காக அகற்றப்பட்டன. இக்குடும்பங்கள் கண்ணப்பர் திடல் பகுதியில் கைவிடப்பட்ட மாநகராட்சி கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டன. அன்று முதல் இன்று வரை, அடிப்படை வசதிகள் இன்றி அங்கு அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist