அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸை நியமிக்க ட்ரம்ப் முடிவு
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸை நியமிக்க டொனால்டு ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புளோரிடா: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸை நியமிக்க டொனால்டு ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்ப்பின் விசுவாசியான மைக் வால்ட்ஸ் தீவிர சீன விமர்சகர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வரலாற்று வெற்றி பெற்றார். அவர் ஜனவரி 6-ம் தேதி அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார். இந்நிலையில் புதிய அரசில் முக்கிய பதவியில் சிலரை நியமிக்க ட்ரம்ப் முடிவு செய்து வருகிறார்.
What's Your Reaction?