விண்வெளியில் இருந்து பூமிக்கு புறப்பட்ட சுனிதா வில்லியம்ஸ்!

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் பூமிக்கு புறப்பட்டுள்ளனர்.

Mar 19, 2025 - 17:11
 0  7
விண்வெளியில் இருந்து பூமிக்கு புறப்பட்ட சுனிதா வில்லியம்ஸ்!

புளோரிடா: இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் பூமிக்கு புறப்பட்டுள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பூமி கோளுக்கு வருகின்றனர். சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் அன்-டாக் ஆகி பிரிந்துள்ளது.

இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை புளோரிடா கடலில் டிராகன் ஸ்பிளாஷ் டவுன் ஆக உள்ளது. அவர்களுடன் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இருவர் டிராகன் விண்கலம் மூலம் பூமி திரும்புகின்றனர். இதை நாசா தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் பூமியை அடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது வருகையை உலக நாடுகள் எதிர்பார்த்துள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist