பாலஸ்தீன மக்களை சித்ரவதை செய்த ஹமாஸ் தீவிரவாதிகள்: வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல் ராணுவம்

பாலஸ்தீன மக்களை ஹமாஸ் தீவிரவாதக் குழுவினர் சங்கிலியால் கட்டிவைத்து சித்ரவதை செய்யும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. பாலஸ்தீன மக்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவர்கள் அடித்து துன்புறுத்தப்படுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

Nov 12, 2024 - 12:37
 0  1
பாலஸ்தீன மக்களை சித்ரவதை செய்த ஹமாஸ் தீவிரவாதிகள்: வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல் ராணுவம்

ஜெருசலேம்: பாலஸ்தீன மக்களை ஹமாஸ் தீவிரவாதக் குழுவினர் சங்கிலியால் கட்டிவைத்து சித்ரவதை செய்யும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. பாலஸ்தீன மக்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவர்கள் அடித்து துன்புறுத்தப்படுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டில் சுமார் 1,200 பேரை படுகொலை செய்து, 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதையடுத்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், அவர்கள் தங்கியிருக்கும் காசாவில் தீவிர தாக்குதலை நடத்திவருகிறது. இதில், இதுவரை 43,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 70 சதவீதத்தினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist