``தெரு நாய்களின் எண்ணிக்கையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்...'' - கார்த்திக் சிதம்பரம் கடிதம்!

காங்கிரஸ் எம்.பி-யான கார்த்திக் சிதம்பரம் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "சென்னை மாநகராட்சியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, சென்னையில் 1.80 லட்சத்திற்கும் அதிகமான தெரு நாய்கள் இருப்பதாகவும் அவற்றில் 70 சதவீத நாய்கள் கருத்தடை செய்யப்படாமல் இருப்பதாகவும் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.கார்த்திக் சிதம்பரம்சென்னையில் தற்போது மக்கள் தெரு நாய் கடியினால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆண்டும் கார்த்திக் சிதம்பரம் தெரு நாய்களை கட்டுபடுத்துவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். தெரு நாய்கள் பிரச்னையை அறிவியல் ரீதியாக கையாள்வதற்கு உடனடியாக ஒரு தேசிய பணிக்குழு தேவை எனவும் தனது தொகுதியில் தெரு நாய் தொல்லைக்கு உரிய தீர்வு காணும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதுமட்டுமல்ல, கடந்தாண்டு இந்த பிரச்னை குறித்து மக்களவையில் கார்த்திக் சிதம்பரம், "இந்தியாவில் ஆறு கோடி தெருநாய்கள் இருக்கிறது. ரேபிஸ் தடுப்பூசிகளுக்காக ஆண்டுதோறும் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா செலவிடுகிறது. உலகில் உள்ள ரேபிஸ் நோயாளிகளில் 36 சதவீதம் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண தெரு நாய்கள் தொல்லைக்குத் தேசிய அளவிலான சிறப்புக் குழு ஒன்றைப் பிரதமர் மோடி அமைக்க வேண்டும்." என வலியுறுத்தியிருந்தார்.தெரு நாய்கள் தொல்லை: 85 வயதில் நாய் போலக் குறைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் சந்தானம்!வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Mar 19, 2025 - 17:11
 0  6
``தெரு நாய்களின் எண்ணிக்கையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்...'' - கார்த்திக் சிதம்பரம் கடிதம்!

காங்கிரஸ் எம்.பி-யான கார்த்திக் சிதம்பரம் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "சென்னை மாநகராட்சியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, சென்னையில் 1.80 லட்சத்திற்கும் அதிகமான தெரு நாய்கள் இருப்பதாகவும் அவற்றில் 70 சதவீத நாய்கள் கருத்தடை செய்யப்படாமல் இருப்பதாகவும் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

கார்த்திக் சிதம்பரம்

சென்னையில் தற்போது மக்கள் தெரு நாய் கடியினால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆண்டும் கார்த்திக் சிதம்பரம் தெரு நாய்களை கட்டுபடுத்துவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். தெரு நாய்கள் பிரச்னையை அறிவியல் ரீதியாக கையாள்வதற்கு உடனடியாக ஒரு தேசிய பணிக்குழு தேவை எனவும் தனது தொகுதியில் தெரு நாய் தொல்லைக்கு உரிய தீர்வு காணும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதுமட்டுமல்ல, கடந்தாண்டு இந்த பிரச்னை குறித்து மக்களவையில் கார்த்திக் சிதம்பரம், "இந்தியாவில் ஆறு கோடி தெருநாய்கள் இருக்கிறது. ரேபிஸ் தடுப்பூசிகளுக்காக ஆண்டுதோறும் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா செலவிடுகிறது. உலகில் உள்ள ரேபிஸ் நோயாளிகளில் 36 சதவீதம் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண தெரு நாய்கள் தொல்லைக்குத் தேசிய அளவிலான சிறப்புக் குழு ஒன்றைப் பிரதமர் மோடி அமைக்க வேண்டும்." என வலியுறுத்தியிருந்தார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist