ட்ரம்ப்-ஆல் கசந்த உறவு; நட்பின் பரிசை திரும்ப கேட்கும் ஃபிரான்ஸ்? - சுதந்தர தேவி சிலை வந்த கதை
அமெரிக்காவின் புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலையை பிரான்ஸிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரான்ஸ் எம்.பி கூறியிருப்பது சர்வதேச அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது.சுதந்திர தேவி சிலைகடந்த ஆண்டு (2024) அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று அதிபர் பதிவியேற்றிருக்கும் டொனால்டு ட்ரம்ப், அதிரடியாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, ஆவணமற்ற குடியேறிகளை அடிமைகள்போல கை விலங்கிட்டு நாடு கடத்தியது மனித உரிமை மீறல் என பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் கண்டித்திருந்தனர். இதிலிருந்துதான் அமெரிக்கா - பிரான்ஸ் இடையேயான சர்ச்சைகள் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை அடிமைகள்போல கைவிலங்கிட்டு அமெரிக்கா அனுப்பியதை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தப் பலரும் கடுமையாகக் கண்டித்திருந்தனர். டோனால்ட் டிரம்ப்மேலும், சமூக ஆர்வலர்கள், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர்கள் பலரை அமெரிக்கா பணியிலிருந்து நீக்கியது, பிரான்ஸ் உடனான சுற்றுச் சூழல் ஒப்பந்தகள் கைவிடப்பட்டது உள்ளிட்டவை பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது.இப்படியாக டொனால்டு ட்ரம்ப்பின் பல்வேறு நடவடிக்கைகள் பிரான்ஸ் - அமெரிக்கா உடனான வரலாற்று நட்பின் அடித்தளத்தை ஆட்டத் துவங்கிவிட்டது. சுதந்திர தேவி சிலை சர்ச்சைபிரான்ஸை அவமதிக்கும் அமெரிக்காவின் இப்படியான போக்கைக் கண்டிக்கும் விதமாக இடதுசாரி செயல்பாட்டாளரும், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினருமான ரஃபேல் குளக்ஸ்மேன், "அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மாற்றங்கள், அறிவியல் சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களை பணிநீக்கம், உக்ரைன் போர் தொடர்பான முடிவுகள் போன்ற அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கைகள் சுதந்திரம், ஜனநாயகத்திற்கு எதிராக இருக்கிறது. அமெரிக்கா சர்வாதிகாரத்தை தேர்ந்தெடுக்கத் தொடங்கிவிட்டது.பிரான்ஸ் எம்.பி. ரஃபேல் குளக்ஸ்மேன்அதனால் பிரான்ஸ் பரிசாக வழங்கிய சுதந்திரம், ஜனநாயகத்தின் அடையாளமாகவும், பிரான்ஸ் - அமெரிக்கா நட்பின் அடையாளமாகவும் இருக்கும் 'சுதந்திர தேவி' சிலையை வைத்திருக்க அமெரிக்காவிற்குத் தகுதியில்லை. எனவே அதை பிரான்ஸிடம் திரும்ப ஒப்படைத்துவிட வேண்டும்" என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.சுதந்திர தேவி சிலைஅதற்கு அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்(Karoline Leavitt), "சுதந்திர தேவி சிலையை பிரான்ஸிடம் மீண்டும் ஒப்படைப்பதாக இல்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியால்தான் இரண்டாம் உலகப் போரில் நாஜி ஆக்கிரமிப்பில் இருந்து பிரான்ஸ் விடுவிக்கப்பட்டது. அன்று அமெரிக்காவின் ஆதரவு இல்லையென்றால் இன்று பிரான்ஸ் மக்கள் ஜெர்மன் மொழி பேசிக்கொண்டிருப்பார்கள். அதற்காகவே பிரான்ஸ் அமெரிக்காவுக்கு என்றும் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும்" என்று பதிலளித்திருக்கிறார்.இது சர்வதேச அரசியலில் சர்ச்சைகளைக் கிளப்பவிட்டிருக்கிறது. பிரான்ஸ் - அமெரிக்கா வரலாற்று நட்பின் பரிசுசுதந்திர தேவி சிலை:இந்த இரு நாட்டின் நட்பைப் பற்றி தெரிந்துகொள்ள சில நூறு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கும். கி.பி.1700 களில் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது அமெரிக்கா. பல ஆண்டுகள் சுதந்திரத்திற்காகப் போராடிய அமெரிக்கா '1775-1783' ஆண்டில் பிரிட்டனுக்கு எதிராக அமெரிக்கப் புரட்சியை நடத்துகிறது. அதன் விளைவாக 1776-ம் ஆண்டு அமெரிக்க சுதந்திரமடைந்தது. அப்போது அமெரிக்காவிற்கு ஆதரவாக இருந்தது பிரான்ஸ். அதன் பிறகு இருநாடுகளும் நட்பு நாடுகளாக பல போர் மற்றும் கொள்கை ஒப்பந்தகளைப் போட்டுக் கொண்டனர். இரண்டாம் உலகப் போரில் பிரான்ஸுக்கு ஆதரவாக இருந்தது அமெரிக்கா.சுதந்திர தேவி சிலைஇப்படியான பிரான்ஸ் - அமெரிக்கா நட்பின் அடையாளமாக அமெரிக்காவின் 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக 'சுதந்திர தேவி' சிலை 1884 ஆம் பிரான்ஸ் அமெரிக்காவிற்குப் பரிசாக வழங்கியது. பிரான்ஸில் செய்யப்பட்ட இந்த சிலை, 350 பாகங்களாக பிரிக்கப்பட்டு அட்லாண்டிக் கடல் வழியாகக் கப்பலில் அமெரிக்காவிற்குக் கொண்டுவரப்பட்டு பிரான்ஸால் பரிசளிக்கப்பட்டது. சிலைக்கான பீடத்தை அமெரிக்கா நிறுவ, அதில் ஃப்ரான்ஸால் பரிசாக வழங்கப்பட்ட சிலை நிறுவப்பட்டது. இந்தச் சுதந்திரதேவி சிலை, நட்பையும், விடுதலையினையும், மக்களாட்சியினையும் வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகின்றது.Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINKhttps://bit.ly/VikatanWAChannel

அமெரிக்காவின் புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலையை பிரான்ஸிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரான்ஸ் எம்.பி கூறியிருப்பது சர்வதேச அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது.
சுதந்திர தேவி சிலை
கடந்த ஆண்டு (2024) அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று அதிபர் பதிவியேற்றிருக்கும் டொனால்டு ட்ரம்ப், அதிரடியாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, ஆவணமற்ற குடியேறிகளை அடிமைகள்போல கை விலங்கிட்டு நாடு கடத்தியது மனித உரிமை மீறல் என பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் கண்டித்திருந்தனர்.
இதிலிருந்துதான் அமெரிக்கா - பிரான்ஸ் இடையேயான சர்ச்சைகள் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை அடிமைகள்போல கைவிலங்கிட்டு அமெரிக்கா அனுப்பியதை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தப் பலரும் கடுமையாகக் கண்டித்திருந்தனர்.

மேலும், சமூக ஆர்வலர்கள், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர்கள் பலரை அமெரிக்கா பணியிலிருந்து நீக்கியது, பிரான்ஸ் உடனான சுற்றுச் சூழல் ஒப்பந்தகள் கைவிடப்பட்டது உள்ளிட்டவை பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது.
இப்படியாக டொனால்டு ட்ரம்ப்பின் பல்வேறு நடவடிக்கைகள் பிரான்ஸ் - அமெரிக்கா உடனான வரலாற்று நட்பின் அடித்தளத்தை ஆட்டத் துவங்கிவிட்டது.
பிரான்ஸை அவமதிக்கும் அமெரிக்காவின் இப்படியான போக்கைக் கண்டிக்கும் விதமாக இடதுசாரி செயல்பாட்டாளரும், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினருமான ரஃபேல் குளக்ஸ்மேன், "அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மாற்றங்கள், அறிவியல் சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களை பணிநீக்கம், உக்ரைன் போர் தொடர்பான முடிவுகள் போன்ற அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கைகள் சுதந்திரம், ஜனநாயகத்திற்கு எதிராக இருக்கிறது.

அதனால் பிரான்ஸ் பரிசாக வழங்கிய சுதந்திரம், ஜனநாயகத்தின் அடையாளமாகவும், பிரான்ஸ் - அமெரிக்கா நட்பின் அடையாளமாகவும் இருக்கும் 'சுதந்திர தேவி' சிலையை வைத்திருக்க அமெரிக்காவிற்குத் தகுதியில்லை. எனவே அதை பிரான்ஸிடம் திரும்ப ஒப்படைத்துவிட வேண்டும்" என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.

அதற்கு அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்(Karoline Leavitt), "சுதந்திர தேவி சிலையை பிரான்ஸிடம் மீண்டும் ஒப்படைப்பதாக இல்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியால்தான் இரண்டாம் உலகப் போரில் நாஜி ஆக்கிரமிப்பில் இருந்து பிரான்ஸ் விடுவிக்கப்பட்டது. அன்று அமெரிக்காவின் ஆதரவு இல்லையென்றால் இன்று பிரான்ஸ் மக்கள் ஜெர்மன் மொழி பேசிக்கொண்டிருப்பார்கள். அதற்காகவே பிரான்ஸ் அமெரிக்காவுக்கு என்றும் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும்" என்று பதிலளித்திருக்கிறார்.
இது சர்வதேச அரசியலில் சர்ச்சைகளைக் கிளப்பவிட்டிருக்கிறது.
இந்த இரு நாட்டின் நட்பைப் பற்றி தெரிந்துகொள்ள சில நூறு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கும். கி.பி.1700 களில் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது அமெரிக்கா. பல ஆண்டுகள் சுதந்திரத்திற்காகப் போராடிய அமெரிக்கா '1775-1783' ஆண்டில் பிரிட்டனுக்கு எதிராக அமெரிக்கப் புரட்சியை நடத்துகிறது. அதன் விளைவாக 1776-ம் ஆண்டு அமெரிக்க சுதந்திரமடைந்தது. அப்போது அமெரிக்காவிற்கு ஆதரவாக இருந்தது பிரான்ஸ். அதன் பிறகு இருநாடுகளும் நட்பு நாடுகளாக பல போர் மற்றும் கொள்கை ஒப்பந்தகளைப் போட்டுக் கொண்டனர். இரண்டாம் உலகப் போரில் பிரான்ஸுக்கு ஆதரவாக இருந்தது அமெரிக்கா.

இப்படியான பிரான்ஸ் - அமெரிக்கா நட்பின் அடையாளமாக அமெரிக்காவின் 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக 'சுதந்திர தேவி' சிலை 1884 ஆம் பிரான்ஸ் அமெரிக்காவிற்குப் பரிசாக வழங்கியது. பிரான்ஸில் செய்யப்பட்ட இந்த சிலை, 350 பாகங்களாக பிரிக்கப்பட்டு அட்லாண்டிக் கடல் வழியாகக் கப்பலில் அமெரிக்காவிற்குக் கொண்டுவரப்பட்டு பிரான்ஸால் பரிசளிக்கப்பட்டது. சிலைக்கான பீடத்தை அமெரிக்கா நிறுவ, அதில் ஃப்ரான்ஸால் பரிசாக வழங்கப்பட்ட சிலை நிறுவப்பட்டது.
இந்தச் சுதந்திரதேவி சிலை, நட்பையும், விடுதலையினையும், மக்களாட்சியினையும் வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகின்றது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

What's Your Reaction?






