முட்டிமோதும் தென் மாவட்ட அதிமுக: ராஜ்யசபா சீட் யாருக்கு? - பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்
இரண்டு ராஜ்ய சபை உறுப்பினர் பதவியில் ஒன்று தென் மண்டலத்துக்கு என முடிவு செய்துவிட்டதாக தகவல் பரவும் நிலையில், எடப்பாடி பழனிசாமி, அதற்கான நபரை தேர்வு செய்வதில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார்கள்.நாடாளுமன்றம்பரபரக்கும் தென் மாவட்டம்ராஜ்யசபா சீட் யாருக்குஆனால், அதற்குள் மருத்துவ அணி டாக்டர் சரவணன், ஐ.டி விங் செயலாளர் ராஜ் சத்யன், மாஃபா பாண்டியராஜன், கோகுல இந்திரா, மகளிரணி கிருத்திகா முனியசாமி, உசிலம்பட்டி மகேந்திரன், கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் என கட்சியினர் ஆளுக்கு ஒரு பெயர் சொல்லி இவர்தான் அறிவிக்கப்பட உள்ள எம்.பி வேட்பாளர் என்று பேசி வருகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.இது எடப்பாடி ஸ்கெட்ச்இதுகுறித்து அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, "தென் மாவட்டத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி-க்கான நபரை தேர்வு செய்வதன் மூலம் தன்னை சமூக ரீதியாக எதிரியாக சித்தரிக்கும் ஓ.பி.எஸ், டி.டி.வி-க்கு செக் வைக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார். தென் மாவட்டத்திலுள்ள முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை நம்பித்தான் ஓ.பி.எஸ் அரசியல் செய்து வருகிறார். அதனால்தான் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் நின்றும் இரண்டாமிடம் வந்தார். புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டச் செயலாளர்களாக முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தபோதும், அவர் முதலமைச்சராக இருந்தபோது அமைச்சரவையில் அதிக இடம் கொடுத்தபோதும் அச்சமுதாயத்தினரை எடப்பாடிக்கு எதிராக திருப்பி விடும் வேலையை ஓ.பி.எஸ் தொடர்ந்து செய்தார். ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமிஇப்போதும் சில தென்மாவட்ட நிர்வாகிகள் சிலர் செங்கோட்டையனுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எடப்பாடிக்கு உள்ளது. வடக்கு, மேற்கு, மத்திய மாவட்டங்கள் எடப்பாடி அவர் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், தென் மாவட்டத்தில் மட்டும்தான் கட்சி நிர்வாகிகள் ஊசாலட்டத்துடன் இருக்கிறார்கள். அதனால் தென் மாவட்ட முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்க முடிவு செய்துள்ளார்" என்றனர்.முந்தும் சரவணன்?இந்த நிலையில் அ.தி.மு.க மருத்துவ அணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சரவணனுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று அடித்துச் சொல்லும் அவருடைய ஆதரவாளர்களிடம் பேசியபோது, "சில மனக் கசப்புகளால்தான் சில கட்சிகளுக்கு டாக்டர் சரவணன் சென்று வந்தார். ஆனால், எந்தக்கட்சியில் இருந்தாலும் அந்தகக்கட்சிக்கு தன் உழைப்பை முழுமையாக செலுத்துவதிலும், கட்சிக்காக செலவு செய்வதிலும் கணக்கு பார்க்காதவர். மக்கள் மத்தியிலும் நல்ல அறிமுகம் இருக்கும் இவர், தி.மு.க வெற்றி பெற முடியாத திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் நின்று வெற்றி பெற்று சாதனை படைத்தார். அதேபோல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவில் யாரும் போட்டியிட முன்வராத நிலையில் துணிந்து போட்டியிட்டவர். எங்கே இவர் தனக்கு எதிராக வந்துவிடுவாரோ என்று பயந்த செல்லூர் ராஜூ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இவருக்கு வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதனால்தான் மதுரையில் பா.ஜ.க இரண்டாமிடம் வந்தது. அந்த தேர்தலில் கட்சி கொடுத்த நிதியைவிட சொந்த நிதியை அதிகம் செலவு செய்தார். இதெல்லாம் எடப்பாடியாருக்கு நன்கு தெரியும். டாக்டர் சரவணன்அது மட்டுமின்றி தென் மாவட்ட அ.தி.மு.க-வில் முக்குலத்தோரில் உட்பிரிவான கள்ளர், மறவர் சமூதாயத்தை சேர்ந்தவர்களே முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். மற்றொரு பிரிவான அகமுடையார் சமூகத்தினர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். எம்.ஜி.ஆர் காலத்தில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் சங்கரபாண்டியனும், சிவகங்கையில் பொ.அன்பழகனும், ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் டி.ராமசாமியும் செல்வாக்குடன் இருந்தனர். எம்.ஜி.ஆர் டு எடப்பாடி..!எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் ஜெயலலிதாவிடம் இருந்த ஆலோசகர்களால் அகமுடையார்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி வைக்கப்பட்டார்கள். அதையும் மீறி தங்களுடைய கடுமையான உழைப்பால் நாகை மாவட்டத்தில் ஓ.எஸ்.மணியன், திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, விருதுநகர் மாவட்டதில் சிவசாமி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜி.முனியசாமி, சிவகஙகை மாவட்டத்தில் சந்திரன், உமாதேவன் உள்ளிட்டோர் மாவட்டச் செயலாளராக இருந்தனர். ஜெயலலிதா அ.தி.மு.க-வில் தலைமையேற்ற பின்பு 72 பேர் ராஜ்யசபா எம்.பி-க்களாக நியமிக்கப்பட்டதில், எஸ்.எஸ்.சந்திரன், ஓ.எஸ்.மணியன் ஆகிய இருவருக்கு மட்டுமே அகமுடையார் சமுதாயத்தில் வாய்பு கிடைத்துள்ளது. தி.மு.க-வுடன் ஒப்பிடும்போது இது குறைவு. வட மாவட்டத்திலும் தென் மாவட்டத்திலும் 60 லட்சத்துக்கு மேல் உள்ள அகமுடையார் சமூகத்துக்கு அ.தி.மு.க-வில் இனியவது முறையான பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று எடப்பாடியாரிடம் சமுதாயத் தலைவர்கள் இப்போது வலியுறுத்தியுள்ளார்கள். அதன் தொடக்கமாக ராஜ்யசபா உறுப்பினர் அறிவிப்பினை செய்வார் என்று நம்புகிறோம்" என்றனர்.எடப்பாடி பழனிசாமி, டாக்டர் சரவணன்அ.தி.மு.க-வில் இணைந்து பின்பு சொந்தச் செலவில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவரும் டாக்டர் சரவணன, சமீகாலமாக ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு வட மாவட்டங்களில் பல லட்ச ரூபாய் செலவில் மருத்துவ முகாம்களை நடத்தினார். அதிலும் சேலம் மாவட்டத்திலும் பெரிய அளவில் அவர் நடத்திய மருத்துவ முகாம் எடப்பாடி பழனிசாமியை மகிழ்ச்சியடைய வைத்ததாம். அதே நேரம், அதிமுக-வுக்கு ஒரு இடம் தான் உறுதியாக உள்ளது. மற்றொரு இடத்துக்கு, பாஜக, அல்லது பாமக அல்லது ஓ.பி.எஸ் ஆதரவை எதிர்நோக்க உள்ளது. அந்த ஆதரவு கிடைத்தாலும், அவர்கள் ஆதரவாளர்களுக்கு அல்லது நிர்வாகிகளுக்கு அந்த இடத்தை ஒதுக்க நேரலாம். இதனால் ஒரே ஒரு இடம் மட்டும் தான் எடப்பாடி கோட்டாவில் இருக்கிரது என்பதால், அதிமுக நிர்வாகிகள் பலரிடையேயும் இந்த பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த சிலர் இந்த பதவியை எதிர்பார்க்கிறார்கள். விரைவில் இத

இரண்டு ராஜ்ய சபை உறுப்பினர் பதவியில் ஒன்று தென் மண்டலத்துக்கு என முடிவு செய்துவிட்டதாக தகவல் பரவும் நிலையில், எடப்பாடி பழனிசாமி, அதற்கான நபரை தேர்வு செய்வதில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
ஆனால், அதற்குள் மருத்துவ அணி டாக்டர் சரவணன், ஐ.டி விங் செயலாளர் ராஜ் சத்யன், மாஃபா பாண்டியராஜன், கோகுல இந்திரா, மகளிரணி கிருத்திகா முனியசாமி, உசிலம்பட்டி மகேந்திரன், கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் என கட்சியினர் ஆளுக்கு ஒரு பெயர் சொல்லி இவர்தான் அறிவிக்கப்பட உள்ள எம்.பி வேட்பாளர் என்று பேசி வருகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
இது எடப்பாடி ஸ்கெட்ச்
இதுகுறித்து அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, "தென் மாவட்டத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி-க்கான நபரை தேர்வு செய்வதன் மூலம் தன்னை சமூக ரீதியாக எதிரியாக சித்தரிக்கும் ஓ.பி.எஸ், டி.டி.வி-க்கு செக் வைக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார். தென் மாவட்டத்திலுள்ள முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை நம்பித்தான் ஓ.பி.எஸ் அரசியல் செய்து வருகிறார். அதனால்தான் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் நின்றும் இரண்டாமிடம் வந்தார்.
புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டச் செயலாளர்களாக முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தபோதும், அவர் முதலமைச்சராக இருந்தபோது அமைச்சரவையில் அதிக இடம் கொடுத்தபோதும் அச்சமுதாயத்தினரை எடப்பாடிக்கு எதிராக திருப்பி விடும் வேலையை ஓ.பி.எஸ் தொடர்ந்து செய்தார்.
இப்போதும் சில தென்மாவட்ட நிர்வாகிகள் சிலர் செங்கோட்டையனுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எடப்பாடிக்கு உள்ளது. வடக்கு, மேற்கு, மத்திய மாவட்டங்கள் எடப்பாடி அவர் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், தென் மாவட்டத்தில் மட்டும்தான் கட்சி நிர்வாகிகள் ஊசாலட்டத்துடன் இருக்கிறார்கள். அதனால் தென் மாவட்ட முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்க முடிவு செய்துள்ளார்" என்றனர்.
முந்தும் சரவணன்?
இந்த நிலையில் அ.தி.மு.க மருத்துவ அணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சரவணனுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று அடித்துச் சொல்லும் அவருடைய ஆதரவாளர்களிடம் பேசியபோது, "சில மனக் கசப்புகளால்தான் சில கட்சிகளுக்கு டாக்டர் சரவணன் சென்று வந்தார். ஆனால், எந்தக்கட்சியில் இருந்தாலும் அந்தகக்கட்சிக்கு தன் உழைப்பை முழுமையாக செலுத்துவதிலும், கட்சிக்காக செலவு செய்வதிலும் கணக்கு பார்க்காதவர். மக்கள் மத்தியிலும் நல்ல அறிமுகம் இருக்கும் இவர், தி.மு.க வெற்றி பெற முடியாத திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் நின்று வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
அதேபோல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவில் யாரும் போட்டியிட முன்வராத நிலையில் துணிந்து போட்டியிட்டவர். எங்கே இவர் தனக்கு எதிராக வந்துவிடுவாரோ என்று பயந்த செல்லூர் ராஜூ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இவருக்கு வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதனால்தான் மதுரையில் பா.ஜ.க இரண்டாமிடம் வந்தது. அந்த தேர்தலில் கட்சி கொடுத்த நிதியைவிட சொந்த நிதியை அதிகம் செலவு செய்தார். இதெல்லாம் எடப்பாடியாருக்கு நன்கு தெரியும்.
அது மட்டுமின்றி தென் மாவட்ட அ.தி.மு.க-வில் முக்குலத்தோரில் உட்பிரிவான கள்ளர், மறவர் சமூதாயத்தை சேர்ந்தவர்களே முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். மற்றொரு பிரிவான அகமுடையார் சமூகத்தினர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். எம்.ஜி.ஆர் காலத்தில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் சங்கரபாண்டியனும், சிவகங்கையில் பொ.அன்பழகனும், ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் டி.ராமசாமியும் செல்வாக்குடன் இருந்தனர்.
எம்.ஜி.ஆர் டு எடப்பாடி..!
எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் ஜெயலலிதாவிடம் இருந்த ஆலோசகர்களால் அகமுடையார்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி வைக்கப்பட்டார்கள். அதையும் மீறி தங்களுடைய கடுமையான உழைப்பால் நாகை மாவட்டத்தில் ஓ.எஸ்.மணியன், திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, விருதுநகர் மாவட்டதில் சிவசாமி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜி.முனியசாமி, சிவகஙகை மாவட்டத்தில் சந்திரன், உமாதேவன் உள்ளிட்டோர் மாவட்டச் செயலாளராக இருந்தனர்.
ஜெயலலிதா அ.தி.மு.க-வில் தலைமையேற்ற பின்பு 72 பேர் ராஜ்யசபா எம்.பி-க்களாக நியமிக்கப்பட்டதில், எஸ்.எஸ்.சந்திரன், ஓ.எஸ்.மணியன் ஆகிய இருவருக்கு மட்டுமே அகமுடையார் சமுதாயத்தில் வாய்பு கிடைத்துள்ளது. தி.மு.க-வுடன் ஒப்பிடும்போது இது குறைவு. வட மாவட்டத்திலும் தென் மாவட்டத்திலும் 60 லட்சத்துக்கு மேல் உள்ள அகமுடையார் சமூகத்துக்கு அ.தி.மு.க-வில் இனியவது முறையான பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று எடப்பாடியாரிடம் சமுதாயத் தலைவர்கள் இப்போது வலியுறுத்தியுள்ளார்கள். அதன் தொடக்கமாக ராஜ்யசபா உறுப்பினர் அறிவிப்பினை செய்வார் என்று நம்புகிறோம்" என்றனர்.
அ.தி.மு.க-வில் இணைந்து பின்பு சொந்தச் செலவில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவரும் டாக்டர் சரவணன, சமீகாலமாக ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு வட மாவட்டங்களில் பல லட்ச ரூபாய் செலவில் மருத்துவ முகாம்களை நடத்தினார். அதிலும் சேலம் மாவட்டத்திலும் பெரிய அளவில் அவர் நடத்திய மருத்துவ முகாம் எடப்பாடி பழனிசாமியை மகிழ்ச்சியடைய வைத்ததாம்.
அதே நேரம், அதிமுக-வுக்கு ஒரு இடம் தான் உறுதியாக உள்ளது. மற்றொரு இடத்துக்கு, பாஜக, அல்லது பாமக அல்லது ஓ.பி.எஸ் ஆதரவை எதிர்நோக்க உள்ளது. அந்த ஆதரவு கிடைத்தாலும், அவர்கள் ஆதரவாளர்களுக்கு அல்லது நிர்வாகிகளுக்கு அந்த இடத்தை ஒதுக்க நேரலாம். இதனால் ஒரே ஒரு இடம் மட்டும் தான் எடப்பாடி கோட்டாவில் இருக்கிரது என்பதால், அதிமுக நிர்வாகிகள் பலரிடையேயும் இந்த பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த சிலர் இந்த பதவியை எதிர்பார்க்கிறார்கள். விரைவில் இதற்கொரு முடிவு தெரிந்துவிடும்" என்கிறார்கள்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
What's Your Reaction?






