அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் கமலா ஹாரிஸுக்கு சாதக, பாதகங்கள் என்னென்ன? - ஓர் அலசல்

சொந்தக் கட்சியில் முழுமையான ஆதரவு, இளைஞர்கள் மத்தியில் ஏகோபத்திய வரவேற்பு, பல்வேறு தேர்தல் கருத்துக் கணிப்புகளிலும் முன்னிலை என ஜொலித்துக் கொண்டிருக்கும் கமலாவுக்கு முன் இருக்கும் சவால்கள் தான் என்ன?

Aug 24, 2024 - 10:07
 0  0
அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் கமலா ஹாரிஸுக்கு சாதக, பாதகங்கள் என்னென்ன? - ஓர் அலசல்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெறுகிறது. எனினும், இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே அமெரிக்க அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. ஜூலை 21-ஆம் தேதி அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக இப்போதைய அதிபரும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருமான பைடன் அறிவித்தார். பைடன் பின்வாங்கியது பேசுபொருளாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாறாக கமலா ஹாரிஸின் பிரவேசம் பிரளயத்தை ஏற்படுத்திவிட்டது. அவருக்கான ஆதரவு அலைகள் பெருகி வருகின்றன. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் பலத்த ஆதரவை அவர் பெற்றுள்ளார்.

சிகாகோவில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வாய்ப்பை கமலா ஹாரிஸ் முறைப்படி ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இந்தச் சாதனை அவரை முதல் பெண் அதிபராகவும் அமர்த்துமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist