“அதிமுகவுக்கு செங்கோட்டையன் உறுதுணையாக இருப்பார்” - கே.பி.முனுசாமி நம்பிக்கை
“எவ்வளவு சோதனைகள் வந்தாலும், அதிமுகவுக்கு செங்கோட்டையன் உறுதுணையாக இருப்பார்” என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி: “எவ்வளவு சோதனைகள் வந்தாலும், அதிமுகவுக்கு செங்கோட்டையன் உறுதுணையாக இருப்பார்” என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், மக்களை சந்திக்கும் திண்ணை பிரச்சாரம் தொடக்க விழா நடந்தது. ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் தங்கமுத்து தலைமை வகித்தார். அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ, ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பேரவை செயலாளர் வடிவேல் வரவேற்றார். திண்ணை பிரச்சாரத்தை, கட்சியின் துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி தொடங்கி வைத்து, அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத் திட்டங்கள், சாதனை விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.
What's Your Reaction?






