கள்ளச் சாராய மரணம் குறித்து தமிழக ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளோம்: இபிஎஸ் பேச்சு @ கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யவேண்டும் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். 

Jun 24, 2024 - 17:36
 0  0
கள்ளச் சாராய மரணம் குறித்து தமிழக ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளோம்: இபிஎஸ் பேச்சு @ கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யவேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் கஞ்சா போதை விற்பனைக் குறித்து தமிழக ஆளுநரிடத்தில் மனு அளித்திருந்தோம், தற்போது கள்ளச் சாராய சம்பவத்தால் 58 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிக்கவுள்ளோம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் அருந்தி 58 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதிமுக சார்பில் இன்று (திங்கட்கிழமை) கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு தலைமைவகித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist