“அதிமுக ஆள வேண்டும் அல்லது திமுக வாழ வேண்டும்!” - ராஜேந்திர பாலாஜி தடாலடி பேச்சு

“தமிழகத்தில் திமுக, அதிமுக இரண்டும் தான் பலமான கட்சிகள். வேறு கட்சிக்கு இங்கு வேலை கிடையாது. ஒன்று, அதிமுக ஆள வேண்டும் அல்லது திமுக வாழ வேண்டும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

Nov 13, 2025 - 10:12
 0  21
“அதிமுக ஆள வேண்டும் அல்லது திமுக வாழ வேண்டும்!” - ராஜேந்திர பாலாஜி தடாலடி பேச்சு

“தமிழகத்தில் திமுக, அதிமுக இரண்டும் தான் பலமான கட்சிகள். வேறு கட்சிக்கு இங்கு வேலை கிடையாது. ஒன்று, அதிமுக ஆள வேண்டும் அல்லது திமுக வாழ வேண்டும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார். சிவகாசியில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து முதல்வர் ஸ்டாலின் தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தைப் பற்றியும் மட்டுமே சிந்தித்து வருகிறார். சாட்சியாபுரம், திருத்தங்கல், சாத்தூர் ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலங்களை அமைக்க மத்திய அரசின் அனுமதி பெற்று அரசாணை வெளியிட்டது அதிமுக அரசு. அதற்கு முயற்சி எடுத்தது நான். இன்றைய திமுக அரசால் மத்திய அரசிடம் அனுமதி பெற முடியுமா? மத்தியில் இருப்பது உங்கள் ஐயா அல்ல... எங்கள் டாடி மோடி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist