“அதிமுகவில் இணைய விரும்பினால்...” - ஓபிஎஸ்ஸுக்கு ராஜன் செல்லப்பா விதித்த நிபந்தனை
அதிமுகவில் இணைய விரும்பினால் ஓ.பன்னீர்செல்வம் 6 மாதம் காலம் அமைதியாக இருக்க வேண்டும், என்று வி.வி.ராஜன் செல்லப்பா நிபந்தனை விதித்துள்ளார்.

மதுரை: “அதிமுகவில் இணைய விரும்பினால் ஓ.பன்னீர்செல்வம் 6 மாதம் காலம் அமைதியாக இருக்க வேண்டும்,” என்று வி.வி.ராஜன் செல்லப்பா நிபந்தனை விதித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் கிராமத்தில் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் நடந்தது. திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுகவுக்கு வலிமையான எதிர்காலம் உள்ளது. அதிமுக இரட்டை தலைமையாக இருந்த போது பெரிய வெற்றியைப் பெறவில்லை. தற்போது ஒற்றை தலைமையில் அதிமுக-வின் வாக்குவங்கி அதிகரித்துள்ளது. மக்கள் ஆதரவு பெருகியுள்ளது. அதிமுக புதிய உச்சத்தை தொட்டு 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வகையில் வலியான எதிர்காலம் உள்ளது,” என்றார்.
What's Your Reaction?






