ஸ்ரீமுஷ்னம் கொலைக்கு முன்விரோதமே காரணம்: அண்ணாமலை புகாருக்கு காவல் துறை விளக்கம்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்னம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி கொல்லப்பட்ட விவகாரத்தில் முன்விரோதமே காரணம் என்றும் கொலைக்கு காரணமானவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்னம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி கொல்லப்பட்ட விவகாரத்தில் முன்விரோதமே காரணம் என்றும், கொலைக்கு காரணமானவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்னம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்பவர், வாக்குப் பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், தேர்தலில் தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, திமுகவினர் இந்தப் பாதகச் செயலை செய்தனர் என்று சில தினங்கள் முன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதற்காக அண்ணாமலை மீது வழக்கு பதியப்பட்டது.
What's Your Reaction?