ஸ்டார் - திரை விமர்சனம்: கனவுகளைத் துரத்தும் போராட்டமும், சில தாக்கங்களும்!
சுக்குநூறாக உடையும் கனவுகளின் கண்ணாடி சிதில்களை ஒவ்வொன்றாக சேர்த்து மீண்டும் கனவு மாளிகை கட்ட முயற்சிப்பதே ‘ஸ்டார்’.
சுக்குநூறாக உடையும் கனவுகளின் கண்ணாடி சிதில்களை ஒவ்வொன்றாக சேர்த்து மீண்டும் கனவு மாளிகை கட்ட முயற்சிப்பதே ‘ஸ்டார்’. சினிமாவில் நாயகனாகும் ஆசையை சிறுவயதிலிருந்தே பற்றிப்பிடித்திருக்கிறார் கலையரசன் (கவின்). இதே போன்றதொரு கனவைக் கண்டு, அதை எட்ட முடியாமல் வாழ்வில் தோல்வியுற்று, கிடைத்த வேலையை தொடர்பவர் அவரது தந்தை பாண்டியன் (லால்). திரையுலகில் அடியெடுத்து வைக்க, பணமும், பொறுமையும் தேவை என்பதால் தாய்க்கு அதில் ஈடுபாடில்லை.
ஈடேறாமல் போன தன்னுடைய லட்சியம், மகனுக்காவது அகப்பட வேண்டும் என கலையரசனை ஹீரோவாக்க உறுதுணையாக நிற்கிறார் தந்தை பாண்டியன். காலம் ‘விபத்து’ என்றொரு வலையை விரித்து நாயகனாக துடிக்கும் கலையரசனின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. இறுதியில் ‘ஸ்டார்’ ஆனாரா, இல்லையா என்பது படத்தின் திரைக்கதை.
What's Your Reaction?