ரூ.250 கோடியை தாண்டும் அமரன்: டாப் ஹீரோ வரிசையில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உட்பட பலர் நடித்து அக்.31-ம் தேதி வெளியான படம், ‘அமரன்’.

Nov 12, 2024 - 12:38
 0  1
ரூ.250 கோடியை தாண்டும் அமரன்: டாப் ஹீரோ வரிசையில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உட்பட பலர் நடித்து அக்.31-ம் தேதி வெளியான படம், ‘அமரன்’. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ள இந்தப் படம் மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவானது.

இந்தப் படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் குவித்து வருகிறது. தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம் மற்றும் வெளிநாடுகளிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை ரூ.244 கோடி வசூலைக் கடந்துள்ள ‘அமரன்’, இந்த வாரத்துக்குள் ரூ.275 கோடியில் இருந்து ரூ.300 கோடி வரை வசூலிக்கும் என்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடித்து அதிக வசூல் செய்த படம், ‘டான்’. இந்தப் படம் ரூ.125 கோடி வசூலித்திருந்தது. அதை விட இரண்டு மடங்கு வசூலை ‘அமரன்’ இப்போதுவரை பெற்றுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist