வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்கு முன்னேறியது எப்படி? | T20 WC அலசல்

ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று கிங்ஸ்டனில் ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதின

Jun 27, 2024 - 11:44
 0  22
வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்கு முன்னேறியது எப்படி? | T20 WC அலசல்

கிங்ஸ்டவுன்: ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று கிங்ஸ்டனில் ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 115 ரன்களே எடுக்க முடிந்தது.

அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 55 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் சேர்த்தார். இப்ராகிம் ஸத்ரன்18, ரஷித் கான் 19, அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 10 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ரிஷாத் ஹோசைன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸ் முடிவடைந்ததும் மழைகுறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வங்கதேச அணி 19 ஓவர்களில் 114 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist