கால் இறுதியில் லக்ஷயா சென் முதல் பிரவீன் ஜாதவ் வெளியேற்றம் வரை | பாரிஸ் ஒலிம்பிக்
பாட்மிண்டனில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில், தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக் ஷயா சென், சக நாட்டைச் சேர்ந்த ஹெச்.எஸ்.பிரனாயுடன் மோதினார்.
கால் இறுதியில் லக்ஷயா சென்: பாட்மிண்டனில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில், தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்ஷயா சென், சக நாட்டைச் சேர்ந்த ஹெச்.எஸ்.பிரனாயுடன் மோதினார். 39 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக் ஷயா சென் 21-12, 21-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் ஆடவர் பிரிவில் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறிய 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் லக் ஷயா சென்.
இதற்கு முன்னர் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் பாருபள்ளி காஷ்யப், 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் கிடாம்பிஸ்ரீகாந்த் ஆகியோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்தனர். கால் இறுதி சுற்றில் லக் ஷயா சென், 12-ம் நிலை வீரரான சீன தைபேவின் தியென் சென்னுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
What's Your Reaction?