யூரோ கோப்பை கால்பந்து தொடர்: நாக் அவுட் சுற்றில் இத்தாலி

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான இத்தாலி அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

Jun 27, 2024 - 11:44
 0  5
யூரோ கோப்பை கால்பந்து தொடர்: நாக் அவுட் சுற்றில் இத்தாலி

லைப்சிக்: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான இத்தாலி அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

ஜெர்மனியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இத்தாலி - குரோஷியா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 54-வது நிமிடத்தில் குரோஷியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதில் லூகா மோட்ரிச் அடித்த ஷாட்டை இத்தாலி கோல் கீப்பர் கியான்லூகி அற்புதமாக தடுத்தார். எனினும் அடுத்த நிமிடத்திலேயே லூகா மோட்ரிச் கோல் அடித்து அசத்தினார். இதனால் குரோஷியா அணி 1-0 என முன்னிலை பெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist