2-வது டி 20 போட்டியிலும் பாக். தோல்வி

நியூஸிலாந்து - பாகிஸ்​தான் அணி​கள் இடையி​லான 2-வது டி 20 கிரிக்​கெட் போட்டி நேற்று டுனிடின் நகரில் நடை​பெற்​றது.

Mar 19, 2025 - 17:12
 0  10
2-வது டி 20 போட்டியிலும் பாக். தோல்வி

டுனிடின்: நியூஸிலாந்து - பாகிஸ்​தான் அணி​கள் இடையி​லான 2-வது டி 20 கிரிக்​கெட் போட்டி நேற்று டுனிடின் நகரில் நடை​பெற்​றது. மழை காரண​மாக 15 ஓவர்​களை கொண்​ட​தாக நடத்​தப்​பட்ட இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த பாகிஸ்​தான் அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 135 ரன்கள எடுத்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் சல்​மான் ஆகா 28 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 46 ரன்​களும், ஷதப் கான் 14 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 26 ரன்​களும் சேர்த்​தனர். நியூஸிலாந்து அணி தரப்​பில் ஜேக்​கப் டஃபி, பென் சியர்​ஸ்,ஜேம்ஸ் நீஷாம், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 136 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 13.1 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 137 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. டிம் ஷெய்​பர்ட் 22 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 45 ரன்​களும், ஃபின் ஆலன் 16 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 38 ரன்​களும் விளாசினர்.

முகமது அலி வீசிய 2-வது ஓவரில் ஃபின் ஆலன் 3 சிக்​ஸர்​களை​யும், ஷாகின் ஷா அப்​ரிடி வீசிய அடுத்த ஓவரில் டிம் ஷெய்​பர்ட் 4 சிக்​ஸர்​களை​யும் பறக்​க​விட்டு மிரளச் செய்​தனர். 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரில் 2-0 என முன்​னிலை வகிக்​கிறது. கிறைஸ்ட்​சர்ச்​சில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. 3-வது ஆட்​டம் ஆக்​லாந்​தில் வரும் 21-ம் தேதி நடை​பெறுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist