மோடியின் வருகையை மேற்கத்திய நாடுகள் பொறாமையுடன் பார்க்கின்றன - ரஷ்யா
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவர், அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சூழலில் பிரதமர் மோடியின் வருகையை மேற்கத்திய நாடுகள் பொறாமையுடன் பார்ப்பதாக மாஸ்கோவின் செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவர், அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சூழலில் பிரதமர் மோடியின் வருகையை மேற்கத்திய நாடுகள் பொறாமையுடன் பார்ப்பதாக மாஸ்கோவின் செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
“மேற்கத்திய நாடுகள் இந்திய பிரதமர் மோடி, ரஷ்யாவுக்கு வருகை தருவதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. மேலும், இதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றன. பொறாமையால் இப்படி செய்கின்றன. இது ரஷ்யா மற்றும் இந்தியா இடையிலான உறவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக நாங்கள் பார்க்கிறோம்.இது அரசு முறை பயணம் தான். இருந்தாலும் இரு தலைவர்களும் பிரத்யேகமாக சந்தித்து பேசவும் உள்ளனர்” என பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். இதனை ரஷ்ய அரசு செய்தி நிறுவனத்தின் வசம் அவர் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?