“காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல”- அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல என்றும், ஹமாஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்: காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல என்றும், ஹமாஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற யூத - அமெரிக்க பாரம்பரிய மாத நிகழ்வில் பேசிய ஜோ பைடன், “காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில், இஸ்ரேலியப் படைகள் இனப்படுகொலை செய்யவில்லை. காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல. இனப்படுகொலை நடப்பதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்.
What's Your Reaction?