``மோடி தன் நண்பர்களுக்காக தள்ளுபடி செய்த ரூ.16 லட்சம் கோடி இருந்திருந்தால்..!" - ராகுல் காந்தி
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடாளுமன்றத் தேர்தலின் பிரசாரக் களம் தீவிரமாகியிருக்கிறது. அதானி, விஜய் மல்லையா, மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்கள் பெற்ற கடனை பா.ஜ.க தலைமையிலான அரசு தள்ளுபடி செய்தது என்பது காங்கிரஸின் குற்றச்சாட்டு. இது தொடர்பாக தன் ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி,``மோடி தன் கோடீஸ்வர நண்பர்களின் ரூ.1,60,00,00,00,00,00,000, அதாவது ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறார்.மோடி இந்த பணம் இந்தியர்களின் வலியை, தேவையை சரிசெய்வதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம், ஆனால் 'அதானிகள்' போன்றவர்களுக்கு ஹைப் உருவாக்குவதற்காக செலவிடப்பட்டிருக்கிறது. இந்த பணத்தில் சுமார் 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை வழங்கியிருக்க முடியும். அல்லது 16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கியிருக்க முடியும். 10 கோடி விவசாயிகளின் கடனை அடைத்து, தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கலாம். 20 ஆண்டுகளுக்கு ரூ.400-க்கு காஸ் சிலிண்டர்களை மொத்த நாட்டிற்கும் வழங்கியிருக்க முடியும். இந்திய ராணுவத்தின் மொத்த செலவையும் 3 ஆண்டுகளுக்கு ஏற்றிருக்கலாம். பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர் பட்டப்படிப்பு வரையிலான கல்வியை இலவசமாக வழங்கியிருக்கலாம்.ராகுல் காந்தி இந்தியர்களின் வலியைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டிய பணம், அதானிகள் போன்றவர்களுக்காகச் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். இனி நிலைமை மாறும். ஒவ்வொரு இந்தியனின் முன்னேற்றத்திற்காகவும் காங்கிரஸ் அரசை வழிநடத்தும்" எனப் பதிவிட்டிருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxsமோடி விதைக்கும் வெறுப்பு அரசியல்... பயத்தில் பாஜக?! | Elangovan Explains
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடாளுமன்றத் தேர்தலின் பிரசாரக் களம் தீவிரமாகியிருக்கிறது. அதானி, விஜய் மல்லையா, மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்கள் பெற்ற கடனை பா.ஜ.க தலைமையிலான அரசு தள்ளுபடி செய்தது என்பது காங்கிரஸின் குற்றச்சாட்டு. இது தொடர்பாக தன் ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி,``மோடி தன் கோடீஸ்வர நண்பர்களின் ரூ.1,60,00,00,00,00,00,000, அதாவது ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறார்.
இந்த பணம் இந்தியர்களின் வலியை, தேவையை சரிசெய்வதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம், ஆனால் 'அதானிகள்' போன்றவர்களுக்கு ஹைப் உருவாக்குவதற்காக செலவிடப்பட்டிருக்கிறது. இந்த பணத்தில் சுமார் 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை வழங்கியிருக்க முடியும். அல்லது 16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கியிருக்க முடியும். 10 கோடி விவசாயிகளின் கடனை அடைத்து, தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.
அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கலாம். 20 ஆண்டுகளுக்கு ரூ.400-க்கு காஸ் சிலிண்டர்களை மொத்த நாட்டிற்கும் வழங்கியிருக்க முடியும். இந்திய ராணுவத்தின் மொத்த செலவையும் 3 ஆண்டுகளுக்கு ஏற்றிருக்கலாம். பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர் பட்டப்படிப்பு வரையிலான கல்வியை இலவசமாக வழங்கியிருக்கலாம்.
இந்தியர்களின் வலியைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டிய பணம், அதானிகள் போன்றவர்களுக்காகச் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். இனி நிலைமை மாறும். ஒவ்வொரு இந்தியனின் முன்னேற்றத்திற்காகவும் காங்கிரஸ் அரசை வழிநடத்தும்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
What's Your Reaction?